FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இனி தத்கல், ஆர்ஏசி, கட்டண மாற்றம் இல்லை! புதிய வந்தே பாரத் சேவை பற்றிய முழு விவரம்

இனி தத்கல், ஆர்ஏசி, கட்டண மாற்றம் போன்றவை படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் சேவையில் கிடையாது என்பது பற்றி..

வந்தே பாரத் சேவை - IANS
பகிர்:

நாடு முழுவதும், ரயில் பயணிகளின் விருப்பத் தேர்வாக இருப்பது வந்தே பாரத் ரயில், அதிலும் குறிப்பாக, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிநவீன படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

தற்போது குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கம் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில், விரைவில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ரயில் சேவையில், டிக்கெட் முன்பதிவின்போது வழக்கமான சில நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது, இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, இந்த பிரீமியம் சேவைகளில் தத்கல் (கடைசி நிமிட) முன்பதிவு வசதி கிடைக்காது.

டைனமிக் அல்லது தேவைக்கு ஏற்ப விலை நிர்ணய முறை இந்த ரயில் சேவையில் இல்லை. இதன் மூலம், பயணத் தேதிக்கு நெருங்கும் போது டிக்கெட் விலைகள் அதிகரிக்கும் என்ற அபாயம் இதில் இருக்காது.

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் வழக்கமான முன்பதிவு முறை மூலமாகவே முன்பதிவு செய்யப்படும்.

ஆனால், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த ரயில்களில் உறுதிசெய்யப்பட்ட படுக்கைகள் மட்டுமே வழங்கப்படும்.

ஆர்ஏசி அல்லது காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.

எனவே, இந்த வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க, கடைசி நிமிடத்தில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு பதிலாக முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

முழுக்க முழுக்க ஏசி வசதியுடை 16 பெட்டிகளைக் கொண்டது, இந்த வந்தே பாரத் ரயில்கள். இதில் 823 படுக்கை வசதிகள் மூன்று வகுப்புகளில் பிரித்து வழங்கப்படும்.

ஏசி-3 படுக்கை வசதிகொண்ட பெட்டியில் 611 டிக்கெட்டுகளும், ஏசி-2 படுக்கை வசதிகொண்ட பெட்டியில் 188 டிக்கெட்டுகளும் ஏசி முதல் வகப்பில் 24 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யலாம்.

இந்த ரயிலில், 6 இருக்கைகள் பெண் பயணிகளுக்கும், 21 இருக்கைகள் ரயில்வே ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது, நாடு முழுவதும் மூன்று நகரங்களுக்கு இடையே மட்டுமே இந்த சேவை இயக்கப்படுகிறது. ஹௌரா - குவகாத்தி, புது தில்லி - வாராணசி, மும்பை - பெங்களூர் நகரங்களுக்கு இடையே தலா ஒரு இணை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த ரயில் சேவை பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படவிருக்கிறது.

summary

No Tatkal, RAC, or fare changes! Full details on the new Vande Bharat service

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.