FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெங்களூர் - மும்பை இடையே விமானமா? வந்தே பாரத் ரயிலா? எது சிறந்தது என ஒரு ஒப்பீடு!

பெங்களூர் - மும்பை இடையே விமானமா? வந்தே பாரத் ரயிலா? எது சிறந்தது என போட்டி எழுமா என்பது பற்றி..

மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில். - file photo
பகிர்:

பெங்களூர் - மும்பைக்கு இடையே பயணிக்க வேண்டும், விமானத்தில் செல்லலாமா? வந்தே பாரத் ரயிலில் செல்லலாமா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மாறியிருக்கிறது ரயில் சேவை. சபாஷ் சரியான போட்டி என்கிறார்கள் ரயில் பயணிகள்.

இரு நகரங்களுக்கு இடையே பயணிப்பவர்களின் வசதிக்காக, அண்மையல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

Advertisement

Advertisement

இதனால், பயண நேரம் வெகுவாகக் குறைந்து மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக மாறியிருக்கிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில், விமானத்தில் போக முடியாது, ஆனால், விரைவாகவும் வசதியாகவும் பயணிக்க வேண்டும் என்பவர்களுக்கான மிகச் சரியான தெரிவாக மாறிவிட்டது.

பெங்களூர் - மும்பை வந்தே பாரத் படுக்கை வசதிகொண்ட இரயிலை, நவம்பர் 1-ஆம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சுமார் 16 மணி நேரத்தில் ஏறத்தாழ 1,118 கி.மீ. தொலைவைக் கடக்கும் இந்த இரயில், மூன்று வகையான வகுப்புகளை கொண்டிருக்கிறது.

ஏசி 3-வகுப்பு பெட்டிக்கு ரூ. 2,810, ஏசி 2-வகுப்பு ரயில் பெட்டிக்கு ரூ. 3,630 மற்றும் முதல் வகுப்பு ஏசிக்கு ரூ. 4,450 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த கட்டணங்கள் முறையே ஏறத்தாழ ரூ. 2.51, ரூ. 3.25 மற்றும் ரூ. 3.98 ஆக இருக்கும். ஜிஎஸ்டி தனியாக வசூலிக்கப்படுகிறது.

தற்போது, இந்த வந்தே பாரத் ரயில் சேவை முன்பதிவு (RAC) அல்லது காத்திருப்புப் பட்டியல் வசதிகள் இல்லாமல், உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டுகளுடன் மட்டுமே இயக்கப்படுகிறது.

இதே பெங்களூர்-மும்பை விமானப் பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 4,178. சுமார் 835 கி.மீ வான்வழித் தொலைவைக் கடக்க, சுமார் இரண்டு மணி நேரங்கள் ஆகும். அதன்படி, ஒரு கிலோமீட்டருக்கு விமானப் பயணத்துக்கு ரூ. 5 செலவாகிறது.

எனவே, வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயிலின் ஏசி 3-வகுப்பில் பயணிக்க விமானப் பயணத்தைவிட கூடுதலாக ரூ. 1,368 செலுத்த வேண்டியிருக்கும்; ஆனால், பயண நேரம் சுமார் 14 மணி நேரம் மிச்சமாகும். ஆனால், இதில், விமான நிலையம் செல்வது, செக்-இன் மற்றும் காத்திருப்பு நேரம், விமான நிலையத்திலிருந்து வெளியே வருவது போன்றவற்றை கணக்கிட்டால் ஒரு 10 மணி நேரம்தான் மிச்சமாகும்.

தற்போது, வந்தே பாரத் ரயில், பெங்களூர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 7:45 மணிக்குக் கிளம்பி, மறுநாள் காலை 11:55 மணிக்கு மும்பை சென்றடைகிறது. மறு வழித்தடத்தில், மும்பையிலிருந்து இரவு 8:10 மணிக்குக் கிளம்பி, மதியம் பெங்களூருவை வந்தடைகிறது.

10 மணி நேரம், குறிப்பிட்ட நேரத்தில் பயணம் போன்றவற்றை ஒப்பிடுகையில், விமானப் பயணத்துக்கு நிகராக வந்தே பாரத் பயணம் விரைவில் மாறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Between Bangalore and Mumbai: A flight or the Vande Bharat train—which is the better option? A comparison!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.