FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பேட்டர்களின் கால் விரல்கள் ஜாக்கிரதை... எச்சரிக்கை விடுத்த மும்பை இந்தியன்ஸ்!

அர்ஷ்தீப் சிங் வருகைக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் வைரல் பதிவு குறித்து...

ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் - படம்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ்
பகிர்:

அர்ஷ்தீப் சிங் வருகைக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி, “பேட்டர்களின் கால் விரல்கள் ஜாக்கிரதை” என எச்சரித்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹார்திக் பாண்டியா தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் டிரேடிங் மூலம் மாறியுள்ளார். பஞ்சாபில் இருந்து அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸுக்கு மாறியுள்ளார்.

Advertisement

Advertisement

மும்பை இந்தியன்ஸில் ரூ. 16.35 கோடி ஊதியத்தில் இருந்த ஹார்திக் பாண்டியா, தற்போது பஞ்சாப் கிங்ஸில் ரூ. 18 கோடிக்கு இணைந்துள்ளார். அர்ஷ்தீப் சிங் அவரது பழைய ஊதியமான ரூ. 18 கோடிக்கு மும்பையில் இணைந்துள்ளார்.

அர்ஷ்தீப் சிங் வருகைக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பந்துவீச்சில் கூடுதல் பலம் கிடைத்துள்ளது. இந்த நிலையில், அந்த அணி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அன்பான பேட்டர்களே, ஸ்டம்புகள் பறக்கும். பேட்டின் முனைகளும் பறக்கும். நடுவரின் கை விரல் உயரும். பிறகு கால் விரல்கள்? அதனை பாதுகாப்பது நல்லது.

டி20 சர்வதேச போட்டிகளில் மட்டுமில்லாமல் ஐபிஎல் போட்டிகளிலும் இந்த இணை உங்களை வேட்டையாடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பதிவு மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்ஸ்டாகிராமில் அதிகமாக பகிரப்பட்டும் ரீல்ஸ்கள் வெளியிடப்பட்டும் வருகின்றன.

summary

Toes of batters? Better protect them from bumrah and arshdeep says Mumbai Indians

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.