திட்டமிட்டபடி மேற்கிந்தியத் தீவுகளின் கேப்டன் விக்கெட்டை வீழ்த்தினோம்: அர்ஷ்தீப் சிங்
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப்பின் விக்கெட்டினை வீழ்த்த தங்களிடம் தெளிவான திட்டம் இருந்ததாக அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப்பின் விக்கெட்டினை வீழ்த்த தங்களிடம் தெளிவான திட்டம் இருந்ததாக அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று (அக்டோபர் 11) இந்தூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப், டி20 தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார் சாய் ஹோப். அவரை அர்ஷ்தீப் சிங் ஆட்டமிழக்கச் செய்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப்பின் விக்கெட்டினை வீழ்த்த தங்களிடம் தெளிவான திட்டம் இருந்ததாக அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மூன்றாவது டி20 போட்டிக்கு முன்பாக சாய் ஹோப்பின் விக்கெட்டினை வீழ்த்துவது குறித்து திட்டமிட்டோம். திட்டமிட்டபடியே அவரது விக்கெட்டினை வீழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. இதற்கான பாராட்டுகள் அனைத்தும் பயிற்சியாளர்களையேச் சேரும். அவர்களது திட்டங்கள் எங்களுக்கு உதவியது. பந்துவீச்சாளர்களும் அபாரமாக பந்துவீசினர் என்றார்.
இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யக் காரணமாக இருந்த கேப்டன் சாய் ஹோப் மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டின் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Arshdeep Singh stated that they had a clear plan to take the wicket of West Indies captain Shai Hope.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.