FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரூ. 72,000 கோடிக்கு தங்கம் வாங்கி குவித்த இந்தியர்கள்! தீபாவளி பண்டிகையில் விற்பனை அமோகம்!

தீபாவளி, தந்தேரஸ் பண்டிகைகளையொட்டி, ரூ. 72,000 கோடிக்கு தங்கம் வாங்கி குவித்த இந்தியர்களைப் பற்றி...

தங்கம். - (கோப்புப்படம்)
பகிர்:

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டிருந்தாலும் தீபாவளி பண்டிகையையொட்டி, இந்தியாவின் ரூ. 72,000 கோடி வரை தங்கம் வாங்கி குவித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

உலகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலகப் பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. டாலர் வீழ்ச்சியடையும் போதெல்லாம் உலக நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் விலை உயர்கிறது.

உலகளவில் தங்கத்தை அதிகளவில் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளில் 8,000 டன்களுடன் அமெரிக்கா முன்னணியில் இருந்தாலும், இந்தியாவின் வீடுகளில் இருக்கும் தங்கத்தின் அளவு 35,000 முதல் 40,000 டன் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் குறிப்பாக பெண்களிடையே தங்கத்தின் மீதான மோகம் குறைவதேயில்லை. அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல் முடிவுகள், ஈரான் மீதான போரை அமெரிக்கா தொடரப் போவதில்லை என்று வெளியான அறிவிப்புகளால் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு சுமார் ரூ. 1.80 லட்சம் என்ற உச்சபட்ச விலையிலிருந்து ரூ. 1.42 லட்சமாக குறைந்தது. அதாவது கிட்டத்தட்ட 21 சதவிகித விலை சரிந்தது.

தீபாவளி மற்றும் தந்தேரஸ் உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி, இந்தியர்கள் சுமார் ரூ. 72,000 கோடிக்கு தங்கம் வாங்கிக் குவித்திருப்பதாக இந்திய தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் மட்டும் இந்தியர்கள் 52 டன் தங்கத்தை வாங்கியுள்ளதாகவும் அதனால், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவிகிதம் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இனிவரும் காலங்களில் சுப முகூர்த்த நாள் வருவதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவதாலும் தங்கத்தின் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

India hardly needs an excuse to buy gold, so a nearly 21% price dip from a peak of around ₹1.8 lakh to ₹1.42 lakh per 10 grams was basically an open invitation. With festive devotion and a timely breather at the bullion counter in their corner, Dhanteras and Diwali shoppers turned a minor market slip into a dazzling ₹72,000 crore splurge.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.