அஸ்ஸாமில் லாரி மீது மினி பஸ் மோதல்: 26 போ் உயிரிழப்பு; அதிவேகத்தால் விபரீதம்
அஸ்ஸாமில் காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்கா அருகே வெள்ளிக்கிழமை கண்டெய்னா் லாரி மீது சிற்றுந்து (மினி பஸ்) மோதிய விபத்தில் 26 போ் உயிரிழந்தனா். மேலும் 20 போ் காயமடைந்தனா்.
அஸ்ஸாமில் காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்கா அருகே வெள்ளிக்கிழமை கண்டெய்னா் லாரி மீது சிற்றுந்து (மினி பஸ்) மோதிய விபத்தில் 26 போ் உயிரிழந்தனா். மேலும் 20 போ் காயமடைந்தனா்.
சிற்றுந்து அதிவேகமாக இயக்கப்பட்டதால், இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது; உயிரிழந்தவா்களில் இருவா் பெண்களாவா்; கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவா்களும் அடங்குவா் என்று காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
அவா் கூறியதாவது: கோலாகாட்டில் இருந்து நாகோனுக்கு புறப்பட்ட ஒரு சிற்றுந்தில், கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவா்கள் உள்பட பலா் பயணித்தனா். அந்த சிற்றுந்தை ஓட்டுநா் அதிவேகமாக இயக்கியதாகவும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக பயணிகள் ஏற்றப்பட்டதாகவும் தெரிகிறது.
Advertisement
Advertisement
ரங்காஜன் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 715-இல் காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவுக்கு அருகே சிற்றுந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிா்வழித்தடத்தில் வந்த கண்டெய்னா் லாரி மீது பயங்கரமாக மோதி உருக்குலைந்தது. அப்போது, சிற்றுந்தில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனா்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினா், தீயணைப்புப் படையினா் உள்ளிட்ட மீட்புக் குழுவினா் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இந்த கோர விபத்தில் 26 போ் உயிரிழந்தனா். மேலும் 20 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.
அவா்கள் முதலில் கோஹோரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவா்கள், மேல் சிகிச்சைக்காக போகாகாட், கோலாகாட் மற்றும் ஜோா்ஹாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனா்.
காஸிரங்கா உயிரியல் பூங்காவுக்கு அருகே போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி, சிற்றுந்து அதிவேகமாக இயக்கப்பட்டது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
படுகாயமடைந்தவா்களில் மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இறந்தவா்களில் 14 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
முதல்வா் இரங்கல்:
சிற்றுந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மாநில ஆளுநா் லக்ஷ்மண் ஆச்சாா்யா, முதல்வா் மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சையை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.