FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விவாதத்திற்கு மோடி வரட்டும்; உண்மையான தேச விரோதி யார் என்று காட்டுகிறேன்! ராகுல்

தன்னுடன் விவாதத்திற்கு வந்தால் மோடியின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளது பற்றி...

ராகுல் காந்தி - ANI
பகிர்:

தன்னுடன் நேரடி விவாதத்திற்கு வந்தால் பிரதமர் மோடியின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடி பொது விவாதத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ''என்னிடம் கேளுங்கள்' (Ask me) என்ற கலந்துரையாடலின்போது, ​​'நாடாளுமன்றத்திலேயே விவாதம் நடத்தலாம் என்று பாஜக கூறி வரும் நிலையில், ஏன் பொது விவாதத்திற்கு வலியுறுத்துகிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "மக்களவையில் எனக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது. என்னுடைய மேசையில் உள்ள மைக்ரோபோனை அணைத்துவிடுகிறார்கள்.

வேளாண் சட்டங்கள், வாக்குத் திருட்டு, சீன விவகாரம், ஜெனரல் நரவானேவின் புத்தகம், எப்ஸ்டீன் விவகாரம் என எதைப் பற்றியும் என்னை பேச அனுமதிக்கவில்லை. நான் ஒரு நேரடி விவாதத்தை (one-on-one debate) விரும்புகிறேன். நீண்ட உரைகள் கொண்ட விவாதம் எனக்குத் தேவையில்லை.

நீண்ட உரைககளுக்குப் பதிலாக, இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்ளும்வகையிலான நேரடி விவாதத்தையே விரும்புகிறேன்.

நரேந்திர மோடி என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கட்டும், நானும் அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன். ஒரு மேசையில் ஒரு பக்கம் மோடியும், மறுபக்கம் நானும் இருந்து விவாதிக்கத் தயார்.

இந்த விவாதத்திற்கு நடுவராக அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியையோ அல்லது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தையோ நியமித்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை.

ஆனால் இந்த நேரடி பொது விவாதத்திற்குப் பிறகு பிரதமர் மோடி பிரதமர் பதவியில் இருக்கமாட்டார்" என்று கூறியுள்ளார்.

எக்ஸ் பதிவு

இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு விடியோவும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில்,

"மீண்டும் சொல்கிறேன். என்னுடன் நேரடி விவாதத்திற்கு வந்தால் பிரதமர் மோடியின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும். இது அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். என்னை 'தேச விரோதி' என்று பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வருகிறார்.

உண்மையான தேச விரோதி யார்? உண்மையாக யார், யாரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்? என நான் இந்த நாட்டுக்கு வெளிப்படுத்துகிறேன். அவருக்கும் இந்த உண்மை தெரியும். அவர் இப்போது என்னைப்பற்றி அவதூறு சொல்வதில்லை. ஏனெனில் அவர் என்னுடன் நேரடி விவாதத்திற்கு வர பயப்படுகிறார்" என்று பேசியுள்ளார்.

மேலும் அந்த பதிவில், "உங்களுக்கு ஆதரவான ஊடகங்களின் தீபாவளி நிகழ்வில்கூடவா உங்களுக்கு டெலிபிராம்ப்டர் தேவைப்பட்டது?

பரவாயில்லை. என்னுடன் விவாதத்திற்கு வரும்போதும் ஒரு டெலிபிராம்ப்டரைக் கொண்டு வாருங்கள். உங்களுக்கு விருப்பமான நடுவரையும் அமர்த்திக்கொள்ளுங்கள். நீங்கள் நேரில் வாருங்கள், அது போதும். உண்மையான துரோகி யார் என்பதைத் தெரிந்துகொள்ள இந்த நாடே ஆவலாக இருக்கிறது!" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடி ஒரு துரோகி என்பதை நிரூபிக்க தனக்கு 5 நிமிடங்கள் போதும் என்று ராகுல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

PM Modi will not remain PM after debate with me: Rahul

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.