FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காணாமல் போன ஒரு மாதத்திற்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த நேபாள நாட்டவர்!

நேபாளத்தைச் சேர்ந்தவர், சமூக ஆர்வலரின் முயற்சியால் மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்தது பற்றி...

13 நவம்பர் 2026, 8:14 pm
கோப்புப்படம். - படம்: எக்ஸ்பிரஸ்
பகிர்:

நேபாளத்தைச் சேர்ந்தவர், சமூக ஆர்வலர் ஒருவரின் முயற்சியால் காணாமல் போன ஒரு மாதத்திற்குப் பிறகு தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார்.

நேபாளத்தின் காஞ்சன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரியா கடாயத் (65). இவர் பெங்களூருவில் வசிக்கும் தனது மகனைப் பார்க்கச் சென்றபோது, சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போனார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

சமூக ஆர்வலர் பிரமோத் பார்கவா, மத்திய பிரதேசத்தின் குனா பகுதியில் அவரைக் கண்டறிந்து தனது பாதுகாப்பில் வைத்துக்கொண்டார். அவரிடம் பொறுமையாகப் பேசி, பல முயற்சிகளுக்குப் பிறகு, அவர் நேபாளத்தில் உள்ள சுக்லாபண்டா நகரைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, காஞ்சன்பூரில் உள்ள ஒரு பத்திரிகையாளரைத் தொடர்புகொண்ட பார்கவா, அந்த நேபாள நாட்டவரின் குடும்பத்தினரைக் கண்டுபிடித்தார். இதையடுத்து வெள்ளிக்கிழமை, அவரது பேரன்களான சுபம், சந்தோஷ் கடாயத் மற்றும் மருமகன் கடக் சிங் குன்வார் ஆகியோர் அவரை அழைத்துச் செல்வதற்காக குனாவுக்கு வந்தனர்.

அவர்கள் ஊருக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, குனா மாவட்ட ஆட்சியர் கிஷோர் கன்யால், அந்த நேபாள நாட்டவருக்கு மாலை அணிவித்து கௌரவித்தார். இந்தியாவில் வழிதவறிய பல நேபாள நாட்டவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைய தான் உதவியுள்ளதாக சமூக ஆர்வலர் பார்கவா தெரிவித்தார்.

summary

A 65-year-old Nepalese man who had gone missing while travelling from Nepal to Bengaluru was reunited on Friday with his family through the efforts of a local social worker in Guna district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.