'முரசு' புயலின் போது காணாமல் போன தமிழக மீனவர்களைத் தேடும் பணி தீவிரம்
'முரசு' புயலின் போது காணாமல் போன நான்கு தமிழக மீனவர்களைத் தேடும் பணியில் இந்திய கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டு வருவது குறித்து...
'முரசு' புயலின் போது காணாமல் போன தமிழக மீனவர்களைத் தேடும் பணியில் இந்தியக் கடலோரக் காவல் படை ஈடுபட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஒங்கோல் பகுதியில் உள்ள கோதாபட்டினம் கடற்கரையில், தமிழகத்தை சேர்ந்த மூன்று மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின. மேலும் ஒரு மீனவரின் உடல் கடலில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அக்டோபர் 29 ஆம் தேதி தமிழகத்தில் இருந்து மூன்று படகுகள் மீன்பிடிக்கச் சென்றன. 'முரசு' புயலின் தாக்கத்தால், பாதுகாப்பு கருதி இரண்டு படகுகள் ராமாயப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டன; மூன்றாவது படகு நிஜாம்பட்டினம் துறைமுகத்தை நோக்கிச் சென்றது. அந்த மூன்றாவது படகில் இருந்த ஒன்பது மீனவர்கள், மற்ற இரண்டு படகுகளில் இருந்தவர்களை தேடி, நவ. 3-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நிஜாம்பட்டினத்திலிருந்து ராமாயப்பட்டினத்திற்குப் புறப்பட்டனர்.
Advertisement
Advertisement
ரூ.7 லட்சம் நிவாரண நிதி
இதற்கிடையே, கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். அதில் ரூ. 2 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை அரசு செலவில் தமிழகத்துக்கு கொண்டு வந்து, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
தேடுதல் பணியில் இந்திய கடலோரக் காவல் படை
இந்த நிலையில், காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடும் பணியில் இந்திய கடலோரக் காவல் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.