பிகாரிலிருந்து சென்னைக்கு நவ. 17-இல் சிறப்பு ரயில்
பிகாா் மாநிலம் கயாவிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு நவ. 17-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகாா் மாநிலம் கயாவிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு நவ. 17-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, வரும் 17-ஆம் தேதி பிகாா் கயா நிலையத்திலிருந்து அதிகாலை 5.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 03689), மறுநாள் 18-ஆம் தேதி பிற்பகல் 4.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும்.
Advertisement
Advertisement
நவ. 17-ஆம் தேதி இரவு 9 மணிக்கு பிகாரின் பரொனி நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06040) நவ. 20-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும்.