ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி! ஒடிசா முதல்வர் உறுதி!
குழந்தைகள் தினத்தையொட்டி முதல்வர் வெளியிட்ட தகவல்...
ஒடிசா மாநிலத்திலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி, பாதுகாப்பு மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யத் தனது அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக அந்த மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார்.
ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு முதல்வர் விடுத்த செய்தியில்,
Advertisement
Advertisement
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்துக் குழந்தைகளுக்கும் அன்பான நல்வாழ்த்துகள்.
குழந்தைகள் நம் சமூகத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள், நம் தேசத்தின் எதிர்காலம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி, பாதுகாப்பு மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யவும், அதன் மூலம் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கவும் எங்கள் அரசு உறுதியுடன் உள்ளது.
முன்னதாக, வியாழக்கிழமை புவனேஸ்வரில் உள்ள கேபிடல் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில், மாநில அளவிலான குழந்தைகள் திருவிழாவான 'சுரவி-2026' ஐத் தொடங்கி வைத்த முதலமைச்சர், குழந்தைகள் மாநிலத்தின் மற்றும் நாட்டின் பிரகாசமான எதிர்காலம் என்று கூறினார்.
அவர்கள் வெறும் தொழில்நுட்பப் பயனாளிகளாக மட்டும் இருக்காமல், புதிய கண்டுபிடிப்பாளராக மாற வேண்டும்.
மேலும், 807 பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் ஆய்வகங்களைத் தொடங்கி வைத்த அவர், 7,350 மாணவர்களுக்கு ஒடியா மொழி உதவித்தொகை வழங்கப்படும்.
ஆளுநர் பிரஜ் மோகன் ராம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோர் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்தனர்.