ராஜஸ்தானில் பஞ்சாயத்து தேர்தல்! சங்காரியாவில் அதிகபட்ச வாக்குப்பதிவு!
ராஜஸ்தானில் தேர்தல் களம் விறுவிறுப்பு..
ராஜஸ்தானில் ஜில்லா பரிஷத்துகள், பஞ்சாயத்துச் சமிதிகளுக்கான தேர்தலின் நான்காவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதற்கிடையில், காலை 10 மணி நிலவரப்படி 15.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 25 மாவட்டங்களில் நடைபெற்று வரும் இந்த வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை தொடரும்.
ஹனுமன்கர் மாவட்டத்தின் சங்காரியா பஞ்சாயத்து சமிதியில் அதிகபட்சமாக 22.41 சதவீத வாக்குகளும், பியாவர் பகுதியின் பாட்னூரில் குறைந்தபட்சமாக 8.12 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மொத்தம் 2,524 இடங்களுக்கு (382 ஜில்லா பரிஷத் வார்டுகள் மற்றும் 2,142 பஞ்சாயத்து சமிதி வார்டுகள்) 8,843 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த இறுதிக்கட்டத்தில், 11,905 வாக்குச்சாவடிகளில் 1.05 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள்.
சுரு மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில், பாஜக தலைவர் ராஜேந்திர ரத்தோரின் மகன் பிரக்ரம் சிங் மற்றும் அவரது மருமகள் ஆகியோரும் அடங்குவர்.
நான்கு கட்டத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறும். அதனைத் தொடர்ந்து, ஜில்லா பிரமுகர்கள் மற்றும் பஞ்சாயத்து சமிதி பிரதான்களுக்கான தேர்தல்கள் நடைபெறும்.