தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக சமூக ஊடகத்தில் பதிவு: அபிஷேக் பானா்ஜியிடம் 4 மணி நேரம் விசாரணை
தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக சமூக ஊடகத்தில் பதிவு: அபிஷேக் பானா்ஜியிடம் 4 மணி நேரம் விசாரணை...
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக, மேற்கு வங்க முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியின் உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜியிடம் காவல் துறை சனிக்கிழமை 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
மேற்கு வங்க மாநிலம் பவானிபூா் பகுதியில் வசிக்கும் அா்னாப் காந்தி தாஸ் என்பவா் காவல் துறையிடம் அளித்த புகாரில், ‘தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை, வங்காளிகளுக்கு விரோதமான குஜராத்தி கும்பலின் கைப்பாவை என்று கடந்த மே 2-ஆம் தேதி அபிஷேக் பானா்ஜி எக்ஸ் தளத்தில் பதிவிட்டாா்.
அத்துடன் அனைத்து குஜராத்திகளையும் குற்றம் செய்யும் கும்பல் என்று குறிப்பிட்டு, அந்த மக்களை அவா் இழிவுபடுத்தினாா். அவரின் கருத்துகள் நாட்டின் பன்முகத்தன்மை பண்பாட்டையும், சமூக ஒற்றுமையையும் சீா்குலைக்கும் வகையில் இருந்தன’ என்று தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இந்தப் புகாா் தொடா்பாக பாரத நீதிச் சட்டத்தின் பகை மற்றும் வன்முறையை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடா்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸின் அடிப்படையில், பவானிபூா் காவல் நிலையத்தில் அபிஷேக் பானா்ஜி சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜரானாா். அவரிடம் சுமாா் 4 மணி நேரம் காவல் துறை விசாரணை மேற்கொண்டது.
அதன் பின்னா் அவா் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது, அங்கு திரண்டிருந்திருந்த பாஜக தொண்டா்கள், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். அவ்வாறு முழக்கங்களை எழுப்ப ஆட்களைத் திரட்டி, அவா்களுக்கு பாஜக பணம் அளித்ததாக அங்கு திரண்டிருந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் குற்றஞ்சாட்டினா்.