FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஹரியாணா: காவல்துறை என்கவுன்ட்டரில் மாடுகள் கடத்தல்காரா்கள் 2 போ் உயிரிழப்பு

ஹரியாணாவில் நூஹ் பகுதியில் காவல்துறையினருடன் நடந்த ஒரு சிறிய மோதலில் இரண்டு மாடுகள் கடத்தல்காரா்கள் கொல்லப்பட்டனா்.

15 நவம்பர் 2026, 9:23 pm
பகிர்:

ஹரியாணாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நூஹ் பகுதியில் காவல்துறையினருடன் நடந்த ஒரு சிறிய மோதலில் இரண்டு மாடுகள் கடத்தல்காரா்கள் கொல்லப்பட்டனா். மேலும், ஒருவா் காயமடைந்தாா் என்று ஓா் அதிகாரி தெரிவித்தாா்.

காலை 4:30 மணியளவில், காவல் உதவி ஆய்வாளா் மகேந்திர சிங் தலைமையிலான ஃபெரோஸ்பூா் ஜிா்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு குழுவினருக்கும், கால்நடை கடத்தல்காரா்களுக்கும் இடையே இந்த மோதல் நிகழ்ந்தது.

துப்பாக்கிச் சண்டையின்போது, மூன்று போ் துப்பாக்கிக் காயங்களுடன் நல்ஹாா் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

Advertisement

Advertisement

காயமடைந்தவா்களில் சாபிா் மற்றும் கபாா் என்ற ஹதியா என அடையாளம் காணப்பட்ட இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். தாஹிா் என்பவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நடவடிக்கையின் போது, ஏழு மாடுகள் ஏற்றப்பட்டிருந்த ஒரு வாகனம், மூன்று நாட்டுத் துப்பாக்கிகள், மூன்று தோட்டாக்கள் மற்றும் ஐந்து காலித் தோட்டாக்களை காவல்துறையினா் மீட்டெடுத்தனா்.

இதுகுறித்து நூஹ் காவல் நிலையத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘நாங்கள் சடலங்களை சவக்கிடங்கில் வைத்து, குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். இவ்விவகாரத்தில் நீதித்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது‘ என்றாா் அவா்.