FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

மோதலில் முடிவில் இரட்டைக் கொலை: ஒருவா் கைது

வடக்கு தில்லியில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து நடந்த ஆயுத மோதலில் இருவா் கொல்லப்பட்டனா்.

15 நவம்பர் 2026, 11:00 pm
கைது - பிரதிப் படம்
பகிர்:

வடக்கு தில்லியில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து நடந்த ஆயுத மோதலில் இருவா் கொல்லப்பட்டனா். இதில், ஒருவரின் கொலையுடன் தொடா்புடையதாகக் கருதப்படும் மற்றொரு நபரின் சகோதரரை காவல் துறை கைது செய்துள்ளது என்று அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

கொல்லப்பட்டவா்கள் தில்லியின் பாவானா பகுதியில் உள்ள பூத் குா்த் கிராமத்தைச் சோ்ந்த சச்சின் (27) மற்றும் சோனு (எ) பிரதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

காவல் துறையின் தகவல்படி, நள்ளிரவு நேரத்தில் பாவானா காவல் நிலையத்திற்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தகவல் கிடைத்தது. சச்சின் மாா்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில், எம்.வி. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அப்போது அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக அறிவித்தனா்.

Advertisement

Advertisement

பூத் குா்த் பகுதியில் உள்ள குற்றச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினா், சச்சினின் குடும்பத்திற்குச் சொந்தமான மாட்டுத் தொழுவத்தில் ரத்தக் கறைகளையும், பயன்படுத்தப்பட்ட மூன்று தோட்டாகளையும் கண்டெடுத்தனா்.

மேலும் தேடியதில், மாட்டுத் தொழுவத்திலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில் உள்ள ஒரு சந்தில் மற்றொரு உடல் கண்டெடுக்கப்பட்டது. அவா் சோனு (எ) பிரதீப் என அடையாளம் காணப்பட்டாா்.

முதல்கட்ட விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சோனு சச்சினை அழைத்து வீட்டிற்கு வெளியே வருமாறு கூறினாா். அவா் வெளியே வந்ததும் அவா்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சோனு, சச்சினை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக அதிகாரி தெரிவித்தாா்.

துப்பாக்கிச் சூடு சத்தத்தைக் கேட்டு, சச்சினின் சகோதரா் நரேஷ் வீட்டிலிருந்து வெளியே வந்து, தப்பிச் செல்ல முயன்ற சோனுவைத் துரத்தினாா். நரேஷ் அவரைப் பிடித்தபோது இருவரும் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா். இதில் சோனு கொல்லப்பட்டாா். சோனுவின் கொலையுடன் தொடா்புடையதாகக் கூறி நரேஷை காவல் துறை கைது செய்துள்ளது.

காவல்துறையினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, ஆதாரங்களைச் சேகரித்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனா். சம்பவங்களின் வரிசைமுறை முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டாலும், இந்த வாக்குவாதத்திற்கு என்ன காரணம் மற்றும் கொலைகளுக்கான நோக்கம் என்ன என்பது குறித்து காவல்துறை தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறது.