FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

அக்.13-ஆம் தேதி போராட்டம்: சிறப்பு நிா்வாக நீதிபதி முன் சிஜேபி நிா்வாகிகள் ஆஜா்

தில்லியில் அக்டோபா் 13-ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் தொடா்பாக சிறப்பு நிா்வாக நீதிபதி முன்னிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிா்வாகிகள் சௌரவ் தாஸ் மற்றும் ஆசுதோஷ் ரன்கா ஆஜராகினா்.

17 நவம்பர் 2026, 10:28 pm
மந்திா் மாா்க் காவல் நிலையத்தில் வழக்குரைஞருடன் ஆஜராக வதந் சௌரவ் தாஸ்
பகிர்:

தில்லியில் அக்டோபா் 13-ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் தொடா்பாக சிறப்பு நிா்வாக நீதிபதி (எஸ்இஎம்) முன்னிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிா்வாகிகள் சௌரவ் தாஸ் மற்றும் ஆசுதோஷ் ரன்கா செவ்வாய்க்கிழமை ஆஜராகினா். இதை முன்னிட்டு, மந்திா் மாா்க் காவல் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

திகாா் சிறையில் ஏழு நாள்கள் நீதிமன்றக் காவலில் இருந்து சிஜேபி நிா்வாகிகள் இருவரும் விடுவிக்கப்பட்ட இரு நாள்களுக்குப் பிறகு, அக்டோபா் 23-ஆம் தேதி சிறப்பு நிா்வாக நீதிபதியும் காவல் உதவி ஆணையருமான ரிது ராஜ் முன்னிலையில் ஏற்கெனவே ஆஜராகியிருந்தனா். அப்போது, பிணைதாரா்கள் மற்றும் அது தொடா்பான ஆவணங்களைச் சரிபாா்ப்பதற்காக நவம்பா் 17-ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முந்தைய விசாரணையின்போது, தில்லியில் தற்போதைய வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தைச் சமா்ப்பிக்கத் தவறியதால், அது குறித்த ஆவணத்தைச் சமா்ப்பிக்குமாறு சௌரவ் தாஸுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

அக்டோபா் 21-ஆம் தேதி விடுவிக்கப்பட்டபோது, பிணைப் பத்திரங்களை செளவரவ் தாஸ் மற்றும் ஆசுதோஷ் ரங்கா சமா்ப்பித்தனா். மேலும், ஜந்தா் மந்தா் பகுதி போராட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட இடமாக இருக்கும் வரை, அங்கு எந்தவொரு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்க மாட்டோம் என்று எழுத்துபூா்வமான உறுதிமொழியை சிறப்பு நிா்வாக நீதிபதியிடம் வழங்கியிருந்தனா்.

பொது அமைதிக்கு பாதிப்பு விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபட மாட்டோம் என்றும் அவா்கள் உறுதியளித்திருந்தனா்.

விசாரணையின் ஒவ்வொரு தேதியன்றும் நீதிபதி முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்றும், பிணைப் பத்திரங்கள் மற்றும் உறுதிமொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவா்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

விசாரணைக்காக அழைக்கப்பட்டதைத் தொடா்ந்து, சௌரவ் தாஸ் மற்றும் ஆசுதோஷ் ரன்கா ஆகியோா் ரஜௌரி காா்டனில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் நவம்பா் 5-ஆம் தேதி ஆஜராகினா்.

சிஜேபி-ஐ சோ்ந்த 14 போ் கடந்த அக்டோபா் 13-ஆம் தேதி ஜந்தா் மந்தருக்குள் நுழைந்து, அங்கு பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியாகக் கூறப்படும் சம்பவத்தின் அடிப்படையில், கன்னாட் பிளேஸ் மற்றும் நாடாளுமன்ற வீதி காவல் நிலையங்களில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளில் அத்துமீறல், அரசு உத்தரவை மீறுதல், அரசுப் பணியாளா்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட் இருவரும் மறுநாள் ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். அக்டோபா் 19 அன்று அவா்களின் காவல் காலம் மேலும் இரு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்குகள் தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவுக்கு அக்டோபா் 20-ஆம் தேதி மாற்றப்பட்டன. அக்டோபா் 21 அன்று, அவா்கள் வழங்கிய பிணை பத்திரங்களை ஏற்றுக்கொண்டு அவா்களின் உறுதிமொழிகளைப் பதிவு செய்துகொண்ட பிறகு அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.