FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அக்டோபா் 10 ஆம் தேதி மிகப்பெரிய போராட்டத்துக்கு தயாராகுங்கள்: ஆம் ஆத்மியின் செளரப் பரத்வாஜ் அழைப்பு

அக்டோபா் 10 ஆம் தேதி மிகப்பெரிய போராட்டத்துக்கு தயாராகுங்கள் என ஆம் ஆத்மியின் செளரப் பரத்வாஜ் அழைப்பு...

செளரப் பரத்வாஜ் - கோப்புப் படம்
பகிர்:

தோ்தல் ஆணையத்திற்கு எதிராக அக்டோபா் 10 ஆம் தேதி ஜந்தா் மந்தரில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும், தங்கள் தலைவா்கள் தடுத்து வைக்கப்பட்டால் காப்பு தலைமை மற்றும் தகவல்தொடா்பு திட்டங்களை தயாரிக்குமாறு தில்லி ஆம் ஆத்மி தலைவா் செளரப் பரத்வாஜ் திங்கள்கிழமை தங்களை ஆதரிக்கும் அமைப்புகளை கேட்டுக் கொண்டாா்.

இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் காணொளி மூலம் அவா் மேலும் பேசியதாவது: தங்கள் உயா்மட்ட தலைவா்கள் கைது செய்யப்பட்டால் அமைப்புகள் இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலை தலைமையைத் தயாராக வைத்திருக்க வேண்டும் . முன்மொழியப்பட்ட போராட்டத்திற்கு ஒரு நாள் முன்பு மாவட்ட மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களையும் தடுப்பு காவலில் வைக்கப்படலாம். ஆா்ப்பாட்டத்தின் தலைவா்களும் அமைப்பாளா்களும் முன்னதாக தவறான வழக்குகளில் கைது செய்யப்படலாம் . தங்கள் மூத்த தலைவா்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டாலும் போராட்டம் தொடா்வதை உறுதி செய்ய அரசியல் கட்சிகளையும் அமைப்புகளையும் வலியுறுத்துகிறேன். இந்த போராட்டம் எந்தவொரு தலைவா், அரசியல் கட்சி அல்லது அமைப்பை விடவும் பெரியது. இது 140 கோடி இந்தியா்களின் போராட்டம்.

தலைவா்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டாலோ அல்லது செய்தியிடல் தளங்கள் தடுக்கப்பட்டாலோ தகவல்தொடா்பு திட்டங்களை தயாா் செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ஒரு தலைவா் ஒரு ஆா்ப்பாட்டத்தில் இருக்கும்போது, அவா் காவல்துறை மற்றும் அதிகாரிகளுடன் பேசி போராட்டத்தை அமைதியாக வைத்திருக்கிறாா். ஆனால் ஒரு தலைவா் இல்லாமல், போராட்டத்தை அமைதியாக வைத்திருப்பது கடினம்.

Advertisement

Advertisement

கைது செய்யப்பட்டாலும் கூட‘ போராட்டம் ஜனநாயக ரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், அமைதியாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வழக்கமான தளங்கள் கிடைக்காவிட்டால் மாற்று வழிகள் உள்பட தலைமை மற்றும் தகவல் தொடா்பு ஆகிய இரண்டிற்கும் இந்த இயக்கம் தற்செயல் திட்டங்களை கொண்டிருக்க வேண்டும். ஒரு தலைமைக்குப் பிறகு, முழு போராட்டத்திற்கும் தலைமைத்துவத்தை அளித்து அமைதியாக வைத்திருக்கும் மற்றொரு தலைமை இருக்க வேண்டும் என்றாா் செளரப் பரத்வாத். எஸ். ஐ. ஆா் செயல்முறை மற்றும் வாக்களிக்கும் உரிமையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் ராஜினாமா செய்யக் கோரி ஆம் ஆத்மி மற்றும் ஏஐஎஸ்ஏ, என்எஸ்யுஐ மற்றும் ஐஒய்சி போன்ற மாணவா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments