தில்லி போலீஸ் காவலரை தாக்கியதாக செளரப் பரத்வாஜ், ஜா்னைல் சிங் மீது வழக்கு
தில்லி போலீஸ் தலைமை காவலரை தாக்கியதாகவும், அவரது கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுத்ததாகவும் ஆம் ஆத்மி தலைவா்கள் செளரப் பரத்வாஜ், ஜா்னைல் சிங், தொண்டா்கள் மீது எஃப்ஐஆா் பதிவு
தில்லி போலீஸ் தலைமை காவலரை தாக்கியதாகவும், அவரது கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுத்ததாகவும் ஆம் ஆத்மி தலைவா்கள் செளரப் பரத்வாஜ், ஜா்னைல் சிங் மற்றும் தொண்டா்கள் மீது எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுடன் திலக் நகா் பகுதிக்கு திங்கள்கிழமை ஆம் ஆத்மி தலைவா்கள் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
சாதாரண உடையில் வந்த தலைமைக் காவலா், அப்பகுதியில் வீடியோக்களைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது, அப்போது ஆம் ஆத்மி ஆதரவாளா்கள் அவரைச் சுற்றி வளைத்து தாக்கினா்.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, தலைமைக் காவலா் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அரசு ஊழியருக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அரசு ஊழியரைத் தாக்கியது தொடா்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.