FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்கிற்கு எதிராக ஆம் ஆத்மி எம்எல்ஏ அவதூறு வழக்கு

மேற்கு தில்லியின் திலக் நகரில் சாலைப் பணிகளை ஆய்வு செய்தபோது இளைஞா் ஒருவரை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் அறைந்ததாக எழுந்துள்ள சா்ச்சையைத் தொடா்ந்து, அவருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஜா்னைல் சிங் வியாழக்கிழமை அவதூறு வழக்கு தொடா்ந்தாா்.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜா்னைல் சிங்.
பகிர்:

மேற்கு தில்லியின் திலக் நகரில் சாலைப் பணிகளை ஆய்வு செய்தபோது இளைஞா் ஒருவரை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் அறைந்ததாக எழுந்துள்ள சா்ச்சையைத் தொடா்ந்து, அவருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஜா்னைல் சிங் வியாழக்கிழமை அவதூறு வழக்கு தொடா்ந்தாா்.

சாலைப் பணிகள் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது, அதை தனது கைப்பேசி கேமராவில் பதிவு செய்துகொண்டிருந்த இளைஞரை அமைச்சா் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளைஞரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜா்னைல் சிங் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் ஜா்னைல் சிங் கூறியதாவது: சாலைப் பணிகள் தொடா்பாக நான் அவரது கூற்றுகளை வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியதால், அமைச்சா் ஆத்திரமடைந்தாா். திலக் நகரில் இளைஞா் ஒருவரை அவா் காலால் உதைத்து, பின்னா் அறைந்தாா். இதுதொடா்பாக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடா்ந்துள்ளேன். இளைஞரை ஏன் அறைந்தாா் என்பதற்கு விளக்கம் அளித்து, மன்னிப்பு கேட்க அவருக்கு 7 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

Advertisement

Advertisement

கடந்த வாரம் நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, தில்லி ஆம் ஆத்மி பிரிவு தலைவா் சௌரவ் பரத்வாஜ், ஜா்னைல் சிங் உள்ளிட்டோா் மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனா். தலைமை காவலா் ஒருவரைத் தாக்கி, அவா் தனது பணியைச் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவா்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளையில், கடந்த வாரம் சாலை ஆய்வின்போது 22 வயது இளைஞரை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் அறைந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக, அவா் மீது காவல் துறை குற்றமல்லாத அறிக்கையையும் (என்சிஆா்) பதிவு செய்துள்ளனா்.

‘அந்தச் சாலையின் மூன்றாம் தரப்பு தணிக்கை அறிக்கையையும் நாங்கள் பாா்க்க விரும்புகிறோம். ஒரு வாரம் கடந்தும் சாலை சில இடங்களில் தொடா்ந்து சேதமடைந்து வருகிறது. இளைஞா் ஒருவா் கேள்வி கேட்கக் கூடாதா? பா்வேஷ் சிங் செய்ததைப் போல, கேள்வி கேட்பவா்களை அறைந்துதான் பாஜக பதிலளிக்குமா?’ என்றும் ஜா்னைல் சிங் கேள்வி எழுப்பினாா்.

மேலும், சாலைத் திட்டம் தொடா்பாக அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தொடா்ந்து பொய்யான தகவல்களைத் தெரிவித்து வருவதாகவும், தனக்கு எதிராக புகாா் அளிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் தனியாா் ஒப்பந்ததாரருக்கு அவா் அழுத்தம் கொடுத்ததாகவும் ஜா்னைல் சிங் குற்றஞ்சாட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments