FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நீட் வினாத்தாள் கசிவு! 14 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவு!

14 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பற்றி...

18 வினாடிகள் முன்பு
நீட் வினாத்தாள் கசிவு
பகிர்:

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றம் சாட்டப்பட்ட 14 பேரையும் நவம்பர் 21 அன்று நீதிமன்றத்தில் நிறுத்தி, முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு சிறப்பு நீதிபதி அஜய் குப்தா உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

குற்றச் சதி, மோசடி, நம்பிக்கையை மீறுதல், ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றங்களுக்காகவும், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பொதுத் தேர்வுகள் (முறையற்ற செயல்களைத் தடுத்தல்) சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பதிப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 63-ன் கீழ் (பதிப்புரிமை மீறல்) குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நவம்பர் 25 முதல் தினசரி அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இது குறித்த விரிவான உத்தரவு இன்னும் வெளியாகவில்லை.

மத்திய புலனாய்வு அமைப்பு, பொதுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறையற்ற செயல்கள் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்கும் விரைவு நீதிமன்றத்தில், ஏற்கெனவே 13 பேர் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 2 அன்று கைது செய்யப்பட்ட, மகாராஷ்டிரம், நாந்தேடைச் சேர்ந்த 14-வது நபரான ஷேஷ்ராவ் பஜ்ரங் சூர்யவன்ஷி என்கிற ராஜ் சூர்யவன்ஷி மீதும் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வைத் தேசிய தேர்வு முகவையால் நடத்தப்படுகிறது. வினாத்தாள் கசிவு குறித்த புகார்களைத் தொடர்ந்து, மே 3 அன்று நடைபெற்ற தேர்வை, மே 12 அன்று தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.