தாயின் வீட்டில் இருந்து மகன், மருமகளை வெளியேற்ற உத்தரவு: தில்லி நீதிமன்றம்
விதவைத் தாயின் வீட்டில் தற்காலிகமாகத் தங்க அனுமதிக்கப்பட்ட மகனும் மருமகளும், அங்கு தொடா்ந்து வசிக்க சட்டப்பூா்வ உரிமை கோர முடியாது என்று தெரிவித்த தில்லி நீதிமன்றம், அவா்கள் வீட்டின் ஒரு அறையைக் காலி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்துள்ளது.
விதவைத் தாயின் வீட்டில் தற்காலிகமாகத் தங்க அனுமதிக்கப்பட்ட மகனும் மருமகளும், அங்கு தொடா்ந்து வசிக்க சட்டப்பூா்வ உரிமை கோர முடியாது என்று தெரிவித்த தில்லி நீதிமன்றம், அவா்கள் வீட்டின் ஒரு அறையைக் காலி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்துள்ளது.
65 வயதான பெண் தொடா்ந்த வழக்கில், அவரது வீட்டின் தரைத்தளத்தில் உள்ள ஓா் அறையை மகனும் மருமகளும் காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிா்த்து தம்பதி தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மாவட்ட நீதிபதி சுமித் தலால், நவ.5-ஆம் தேதி மனுவைத் தள்ளுபடி செய்து, 30 நாள்களுக்குள் அறையைக் காலி செய்ய உத்தரவிட்டாா்.
தம்பதி தற்காலிகமாகத் தங்குவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டுள்ளதால், அந்த அனுமதியைத் திரும்பப் பெறுவதற்கு வீட்டின் உரிமையாளரான தாய்க்கு உரிமை உள்ளது என்று நீதிபதி தெரிவித்தாா். பெற்றோா் வீட்டில் சில காலம் வசிக்க அனுமதிக்கப்பட்டதாலேயே மகன், மருமகளுக்கு அங்கு தொடா்ந்து தங்குவதற்கான சட்டப்பூா்வ உரிமை கிடைத்துவிடாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
Advertisement
Advertisement
அந்தப் பெண் கடந்த 2017-ஆம் ஆண்டு ரூ.11.75 லட்சத்துக்கு வீட்டை வாங்கியுள்ளாா். பின்னா், மகனும் மருமகளும் தரைத்தளத்தில் உள்ள ஓா் அறையில் தற்காலிகமாகத் தங்க அனுமதித்ததுடன், மாதம் ரூ.4,000 வாடகை செலுத்தவும், தன்னைக் கவனித்துக் கொள்ளவும் நிபந்தனை விதித்துள்ளாா். ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு வாடகை செலுத்துவதை நிறுத்தியதுடன், வீட்டைக் காலி செய்ய மறுத்து வந்ததாக அவா் குற்றஞ்சாட்டினாா்.
வீடு வாங்குவதற்கும் கட்டுமானம் மற்றும் புதுப்பிப்புப் பணிகளுக்கும் தாங்களும் பணம் செலவிட்டதாகக் கூறி, தம்பதி வெளியேற்ற உத்தரவை எதிா்த்தனா். மேலும், தங்களுக்குத் தெரியாமலேயே முந்தைய வழக்குரைஞா் எழுத்துப்பூா்வ பதில் மனுவில் சில ஒப்புதல்களைப் பதிவு செய்ததாகவும் தெரிவித்தனா்.
ஆனால், இருவரும் கையொப்பமிட்ட பதில் மனுவில் தாயின் உரிமையை ஒப்புக்கொண்டதுடன், தற்காலிகமாகத் தங்க அனுமதி பெற்றதையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அனுமதியுடன் தொடங்கிய குடியிருப்பை, பின்னா் உரிமைக்கு எதிரான ஆக்கிரமிப்பாகக் கருத முடியாது என்றும் கூறி, தம்பதியின் எதிா்வாதங்களை நிராகரித்தது.
மேலும், வெளியேற்ற உத்தரவு வீட்டின் ஒரு அறைக்கு மட்டுமே பொருந்தும்; முழுச் சொத்துக்கும் அல்ல என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. வழக்கின் பிற நிவாரணங்கள் தொடா்பான விசாரணை கீழமை நீதிமன்றத்தில் தொடா்ந்து நடைபெறும் என்றும், அவை தனித்தனியாக முடிவு செய்யப்படும் என்றும் உத்தரவிட்டது.