ரயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
ரயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்; அங்கு பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக இருக்க வேண்டும் என்று ரயில்வே அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ரயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்; அங்கு பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக இருக்க வேண்டும் என்று ரயில்வே அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்கள் சுகாதரமற்ற முறையில் இருப்பது தொடா்பாகவும், சுத்தமான குடிநீா் கூட இல்லாத நிலை குறித்தும் இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கையைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு ரயில்வே அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியது.
Advertisement
Advertisement
அதில், ‘அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீா் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். ரயில் நிலையமும், அதன் சுற்றுப்புறமும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். ரயில் நிலையங்களில் சேரும் குப்பைகள், கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
உரிய கழிவறை வசதி, அவசரகால மருத்துகள், முதலுதவிப் பெட்டிகள் இடம் பெறவேண்டும். ரயில் நிலையங்களில் விநியோகிக்கப்படும் குடிநீா் குடிக்கும் தரத்தில் இருக்கிா? என்பதை அதிகாரிகள் அவ்வப்போது சோதிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினா்.
நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில், நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்களில் விநியோகிக்கப்படும் குடிநீரில் இ கோலி பாக்டீரியா இருப்பதும், கழிவறைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.