FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நவ.30 வரை ஜெட்டா,ரியாத், தம்மாம், மதீனா நகரங்களுக்கான இண்டிகோ விமான சேவை ரத்து

பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு, சவூதி அரேபிய நகரங்களுக்கான இண்டிகோ விமான சேவை ரத்து குறித்து...

7 வினாடிகள் முன்பு
இண்டிகோ விமானங்கள் ரத்து - கோப்புப்படம்
பகிர்:

பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு, சவூதி அரேபிய நகரங்களுக்கான விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் தொடா்ந்து ரத்து செய்து வருகின்றன.

சவூதி அரேபியாவில் ஏராளமான இந்தியா்கள் பணியாற்றி வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு, சவூதி அரேபியாவின் ஜெட்டா, ரியாத், தம்மாம் மற்றும் மதீனா ஆகிய நான்கு நகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் தனது அனைத்து விமான சேவைகளையும் நவம்பர் 30 வரை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது.

Advertisement

Advertisement

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமான நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட தொடர்பு விவரங்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே தங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளா்ச்சி அமைப்பினா், தெற்கு சவூதி அரேபியாவை நோக்கி ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணையை சவூதி தலைமையிலான கூட்டணி இடைமறித்து அழித்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் பாதுகாப்புக் கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சவூதி அதிகாரிகள் தென்மேற்குப் பகுதியில் உள்ள அப்ஹா நகரம் மற்றும் கமிஸ் முஷைத் ஆகிய பகுதிகளுக்கு அவசரகால எச்சரிக்கைகளை விடுத்திருந்தனர், ஆனால் ஆபத்து நீங்கிய பின்னர் அவை திரும்பப் பெறப்பட்டன.

இந்த ரத்து நடவடிக்கைகள் நவம்பர் 30 வரை அமலில் இருக்கும் என்று இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெட்டா, ரியாத், தம்மாம் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களை நவ.14 வரை ரத்து செய்வதாக, ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ நிறுவனங்கள் சில நாள்களுக்கு முன்னா் அறிவித்திருந்தது.

சவூதியில் உள்ள இந்தியா்கள் விழிப்புடன் செயல்படவும், வான்வழித் தாக்குதல் நடக்கும்போது தங்குமிடங்களிலேயே இருக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

IndiGo has cancelled all its flights to and from four major Saudi Arabian cities, Jeddah, Madinah, Riyadh and Dammam until November 30, in view of the prevailing security situation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.