சௌதி அரேபியாவில் பதற்றம்! ஏர் இந்தியா விமான சேவை அக். 20 வரை ரத்து!
சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமான சேவை ரத்து நீட்டிப்பு பற்றி..
ஹௌதிகளின் தாக்குதல்களால் வளைகுடா நாட்டில் பதற்றம் அதிகரித்து வருவதால்9, சௌதி அரேபியாவுக்கான விமானச் சேவைகளை ரத்து அக். 20 வரை நீட்டித்துள்ளதாக ஏர் இந்தியா வெள்ளிக்கிழமை (அக். 16) தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் சௌதி அரேபியாவுக்கான விமானச் சேவைகளை அக்டோபர் 17 வரை ரத்து செய்திருந்தன. தற்போது சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்களின் சேவை அக். 20 வரை ரத்து செய்யப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ் தளப் பதிவில்,
Advertisement
Advertisement
சௌதி அரேபியாவில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, ரியாத், தம்மாம், ஜெட்டா செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் அக். 20 வரை ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழுக் கட்டணமும் திரும்ப வழங்கப்படும். சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பயணிகளின் பாதுகாப்பே எங்களின் முதன்மையான நோக்கம்.
சௌதி அரேபியாவுக்கான விமானச் சேவைகளை ரத்து செய்வதை அக்டோபர் 24 வரை நீட்டிப்பதாக இண்டிகோ வியாழக்கிழமை அறிவித்தது.
மேலும், மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, ரியாத்துக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து விமானச் சேவைகளையும் அக்டோபர் 24 வரையிலும், ஜெட்டாவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானச் சேவைகளை அக்டோபர் 21 வரையிலும் நிறுத்தி வைப்பதை நீட்டித்துள்ளதாக அகசா ஏர் வியாழக்கிழமை தெரிவித்தது.
ஏமனின் ஹௌதிககள் சௌதி அரேபியாவில் உள்ள பொதுமக்கள் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, சமீப நாள்களாகப் பதற்றம் அதிகரித்துள்ளது. ரியாத் விமான நிலையமும் பல தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.