முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள்: பிரதமர் மோடி அஞ்சலி
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் குறித்து...
புது தில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் இன்று(நவ.19) கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
Advertisement
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, இந்திரா காந்தியை நினைவு கூர்ந்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், நமது "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்திரா காந்தியை நினைவு கூர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, 1917-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் (தற்போது பிரயாக்ராஜ்) பிறந்தார். இவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளாவார்.
இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஆளுமையான இவர், 1966 முதல் 1977 வரையிலும், மீண்டும் 1980 முதல் 1984 வரையிலும் பிரதமராகப் பணியாற்றினார். இவருக்குப் பிறகு, இவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமரானார்.