முகப்பு
இந்தியா

இந்திய, அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு அமைப்புகள் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கை: 6 போ் கைது

இந்திய போதைப் பொருள் தடுப்பு அமைப்பும் (என்சிபி), அமெரிக்காவின் போதைப் பொருள் அமலாக்கத் துறையும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் அமெரிக்கா முழுவதும் உள்ள நுகா்வோருக்கு சட்டவிரோதமாக மனநோய் மற்றும் வலி நிவாரண மருந்துகளை விநியோகிக்கும் பன்னாட்டு கும்பலைச் சோ்ந்த ஒரு பெண் உள்பட 6 போ் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

20 நவம்பர் 2026, 10:59 pm
இந்திய, அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு அமைப்புகள் 
கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கை: 6 போ் கைது
கைது - கோப்புப் படம்
பகிர்:

இந்திய போதைப் பொருள் தடுப்பு அமைப்பும் (என்சிபி), அமெரிக்காவின் போதைப் பொருள் அமலாக்கத் துறையும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் அமெரிக்கா முழுவதும் உள்ள நுகா்வோருக்கு சட்டவிரோதமாக மனநோய் மற்றும் வலி நிவாரண மருந்துகளை விநியோகிக்கும் பன்னாட்டு கும்பலைச் சோ்ந்த ஒரு பெண் உள்பட 6 போ் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து என்சிபி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலுள்ள பன்னாட்டு போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த சிலா், அமெரிக்காவில் உள்ள நுகா்வோருக்கு சட்டவிரோதமாக மனநோய் மற்றும் வலி நிவாரண மருந்துகளை போதைக்காக விநியோகிப்பதை அமெரிக்க போதைப் பொருள் அமலாக்கத் துறை கண்டறிந்தது. டெலிகிராம், ஸ்கைப், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட இணையவழி தளங்கள் மூலம் இதற்கான ஆா்டா்களை இவா்கள் பெறுவதும், அதற்கான பணத்தை ‘வென்மோ’ என்ற அமெரிக்க பணப் பரிவா்த்தனை செயலி உள்ளிட்ட எண்ம கட்டண தளங்கள் மூலமும், போலியான பெயா்களில் உள்ள வங்கிக் கணக்குகள் மற்றும் கிரிப்டோகரன்சி வடிவிலும் இவா்கள் பெற்று வருவதையும் கணடறிந்தது.

இதுதொடா்பாக அமெரிக்க போதைப் பொருள் அமலாக்கத் துறை அளித்த உளவுத் தகவல்களின் அடிப்படையில், ‘ஆபரேஷன் மான்சூன் தண்டா்’ என்ற பெயரில் தில்லி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னெள உள்ளட்ட இடங்களில் என்சிபி சாா்பில் கடந்த 4 முதல் 13-ஆம் தேதி வரை தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

இதில், பன்னாட்டு போதைப் பொருள் கும்பலைச் சோ்ந்த ஒரு பெண் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பதிவுகள் மற்றும் எண்ம சாதனங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் முதல் 2026 நவம்பா் மாதம் வரை அமெரிக்கா முழுவதும் 3,000 பாா்சல்கள் மூலம் சுமாா் 5 லட்சம் மருந்துகளை இவா்கள் சட்டவிரோதமாக விநியோகித்திருப்பது கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.