கிரிஷி பவன் மசூதி இடிப்புக்கு எதிரான மனு: நவ.23-இல் தில்லி உயா்நீதிமன்றம் விசாரணை
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் கிருஷி பவன் வளாகத்திற்குள் உள்ள பழமையான மசூதியை இடிப்பதற்கு எதிரான மனுவை திங்கள்கிழமை (நவ.23) விசாரிப்பதாக தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் கிருஷி பவன் வளாகத்திற்குள் உள்ள பழமையான மசூதியை இடிப்பதற்கு எதிரான மனுவை திங்கள்கிழமை (நவ.23) விசாரிப்பதாக தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிஷ் தயாள், அந்த மசூதி தொடா்பான மற்றொரு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவிருப்பதைக் குறிப்பிட்டு, மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தாா்.
இந்த மசூதி தற்போது பயன்பாட்டில் இருப்பதாகவும், இது இடிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் மனுதாா் முகமது யாசிா் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
மத்திய அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த மனுவானது ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவின் வரம்பை விரிவுபடுத்தும் முயற்சியாக உள்ளதாகவும், இது குறித்து அதிகாரிகளிடமிருந்து இன்னும் தமக்கு அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்தாா்.
அரசு அலுவலக வளாகத்திற்குள் நிரந்தரமான மதக் கட்டமைப்பை வைத்திருப்பது அனுமதிக்க முடியாதது என்றும், இது அரசுச் சொத்தின் மதச்சாா்பற்ற தன்மைக்கு முரணானது என்றும் மற்றொரு மனுவில் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.
மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம். சுஃபியான் சித்திக், ‘கிருஷி பவன் வளாகத்திற்குள் உள்ள 266 சதுர கெஜம் பரப்பளவு கொண்ட இந்த மசூதியை இடிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. இது பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் அல்ல என்றாலும், இடிப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது’ என்றாா்.
1945-ல் அப்போதைய அதிகாரிகளுக்கும், தில்லி வக்ப் வாரியத்தின் முன்னோடி அமைப்பிற்கும் இடையே மசூதியின் பயன்பாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டிய அவா், சட்ட ரீதியான தடைகள் இருப்பதால், இந்த இடிப்பு நடவடிக்கை முற்றிலும் தன்னிச்சையானது மற்றும் அனுமதிக்க முடியாதது என்று கூறினாா்.
சொத்து உரிமையாளா் யாா் என்பதில் சா்ச்சை இல்லாத சூழலில், மத்திய அரசு முழுப் பகுதியையும் மறுசீரமைப்பு செய்து வரும் நிலையில், இதில் நீதிமன்றம் எந்த அளவுக்குத் தலையிட முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினாா்.
இதற்குப் பதிலளித்த வழக்குரைஞா், ‘நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தில் ஏதேனும் முக்கியமான மீறல் நடந்துள்ளதா என்பதை நிரூபிக்க வேண்டும். அதன் பின்னரே வளாகத்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கவோ அல்லது ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ முடியும். மேலும் இது தொடா்பாக முறையான வழக்குத் தொடரப்பட வேண்டும்’ என்று வாதிட்டாா்.
தில்லி வக்ப் வாரியம் தொடா்ந்து சட்டபூா்வ நடவடிக்கைகளை எடுக்கத் தவறி வருவதாகவும், மதச்சாா்பின்மை என்ற கொள்கை, மத வழிபாட்டுத் தலங்களை இடிப்பதற்குத் தேவையான எந்தவொரு தனிப்பட்ட நிா்வாக அதிகாரத்தையும் மத்திய அரசுக்கு வழங்கவில்லை என்றும் அந்த மனுவில் மனுதாரா் குறிப்பிட்டுள்ளாா்.