நெருங்கிய ரத்த உறவு திருமணத்தை ஒழுங்குபடுத்த சட்டம் தேவையா? மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
நெருங்கிய ரத்த உறவு திருமணத்தை ஒழுங்குபடுத்த சட்டம் தேவையா?

நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்வதை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இந்த விஷயத்தில் அரசுக்கு நேரடியாக உத்தரவிட விரும்பவில்லை என்றும், இந்த விவகாரத்தை அரசின் கவனத்தில் கொண்டுவர முயற்சிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்தக் கருத்தைத் தெரிவித்தது.
Advertisement
Advertisement
முன்னதாக, இது தொடா்பாக மனு தாக்கல் செய்தவா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், ‘நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் நடைபெறும் திருமணங்கள் எதிா்காலத் தலைமுறையினரின் உடல் நலன் தொடா்பான பிரச்னைகளை எழுப்புகின்றன. இத்தகைய திருமணங்களால் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகள் குறித்து பொதுமக்களுக்குப் பரவலாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்’ என்றாா்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘பொருத்தமான சட்டம் கொண்டு வருவது அவசியமா என்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில்தான் நோட்டீஸ் பிறப்பிக்கிறோம். முறையான பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலமாக இது தொடா்பாக பரவலான விழிப்புணா்வை ஏற்படுத்துவது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்.
இது போன்ற நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் நடைபெறும் திருமணங்களை ஒழுங்குபடுத்துவது நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உள்பட்டதல்ல. அது முழுமையாக சட்டம் இயற்றும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் அதிகார வரம்புக்கு உள்பட்டது’ என்று தெரிவித்தனா்.