முகப்பு

தாயின் நிழலுக்கு நிகர் ஏதுமில்லை! உருக்கமான பதிவு வெளியிட்ட யோகி ஆதித்யநாத்!

தாயாரின் மறைவையொட்டி உருக்கமான பதிவு வெளியிட்ட யோகி ஆதித்யநாத் பற்றி..

44 வினாடிகள் முன்பு
தாயின் நிழலுக்கு நிகர் ஏதுமில்லை! உருக்கமான பதிவு வெளியிட்ட யோகி ஆதித்யநாத்!
யோகி ஆதித்யநாத்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயாரின் உடல், இறுதிச் சடங்கிற்காக ஹரித்வாரில் உள்ள நமாமி கங்கை படித்துறைக்குக் கொண்டு வரப்பட்டது.

யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்ரி தேவி, 91-வது வயதில், உத்தரகண்ட்டில் உள்ள தனது சொந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை காலமானார்.

சனிக்கிழமை காலை, பௌரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பஞ்சூர் கிராமத்திலிருந்த அவரது இல்லத்திலிருந்து, இறுதிச் சடங்கிற்காக சாவித்ரி தேவியின் உடல் ஹரித்வார் படித்துறைக்கு எடுத்து வரப்பட்டது.

Advertisement

Advertisement

படித்துறை பகுதியில், தனது தாயாரின் உடலுக்கு அருகில் நின்றிருந்த யோகி ஆதித்யநாத் மிகுந்த உணர்ச்சிகரமான நிலையில் காணப்பட்டார்.

தனது இல்லத்தில் தாயாருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, யோகி ஆதித்யநாத் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

தாயின் நிழலைப் போன்ற நிழல் வேறெதுவும் இல்லை; தாயின் அடைக்கலத்தைப் போன்ற வேறெதுவும் இல்லை. தாயின் பாதுகாப்பைப் போன்ற பாதுகாப்பு வேறெதுவும் இல்லை; தாயின் அன்பைப் போன்ற அன்பு வேறெதுவும் இல்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

'சண்டி படித்துறை என்று அழைக்கப்படும் நமாமி கங்கை காட் பகுதியில், அவருக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். அங்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கு வருகை தந்தனர்.

உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர்கள் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் பிரஜேஷ் பதக், மற்றும் சுரேஷ் கன்னா உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பலர், இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உத்தரகண்ட் வருகை தருவார்கள் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.