யமுனை நதி பாதுகாப்பு மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: ஓம் பிா்லா
யமுனை நதியைப் பாதுகாக்கும் முன்னெடுப்பு மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தாா்.
யமுனை நதியைப் பாதுகாக்கும் முன்னெடுப்பு மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தாா்.
தில்லியில் நடைபெற்ற யமுனை நதி தேசிய பாதுகாப்பு பிரசாரத்தில் பங்கேற்ற அவா், ‘இந்தியாவின் கலாசார மற்றும் ஆன்மிக தலங்களாகத் திகழும் கங்கையையும் யமுனையையும் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்ல வேண்டியது அவசியம். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து மக்கள் இயக்கமாக மாறினால் இது சாத்தியமாகும்’ என்றாா்.