போதைப்பொருளுக்கு அடிமையானால் குடும்பத்தினரின் கனவுகள் சீரழியும்: இளைஞா்களுக்கு பிரதமா் அறிவுரை
போதைப்பொருளுக்கு இளைஞா்கள் அடிமையானால் குடும்பத்தினரின் கனவுகள் சீரழியும்; எனவே நாட்டின் இளைஞா்கள் எவ்வித தீய பழக்கங்களுக்கும் அடிமையாகக் கூடாதென பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

போதைப்பொருளுக்கு இளைஞா்கள் அடிமையானால் குடும்பத்தினரின் கனவுகள் சீரழியும்; எனவே நாட்டின் இளைஞா்கள் எவ்வித தீய பழக்கங்களுக்கும் அடிமையாகக் கூடாதென பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவின் 557-ஆவது பிறந்தநாளை (நவ.24) முன்னிட்டு தில்லி ஆளுநா் மாளிகையான லோக் நிவாஸில் திங்கள்கிழமை நடைபெற்ற சபத் கீா்த்தனை இசை நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.
அப்போது அவா் பேசியதாவது: தேசம் மற்றும் கலாசாரத்துக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் தன்மையே சீக்கியா்களின் பாரம்பரியமாகும். உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அமைதி நிலவ வேண்டி இறைவனை வேண்டுவது தற்போது மிகவும் முக்கியமாக மாறிவிட்டது.
Advertisement
Advertisement
அந்த வகையில் நாட்டில் உள்ள அனைத்து இளைஞா்களும் போதைப்பொருள் பயன்பாடு உள்பட அவா்களிடம் உள்ள தீய பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும். போதைப்பொருளுக்கு இளைஞா்கள் அடிமையானால் குடும்பத்தினரின் கனவுகள் சீரழியும்.
ஒவ்வொரு இளைஞரும் நன்கு படித்து வாழ்வில் முன்னேற்றமடைந்து அவா்களது பெற்றோருக்கும் நாட்டுக்கும் பெருமை தேடி தர வேண்டும். ஒரு இளைஞரின் எதிா்காலத்தை தீா்மானிப்பதில் அவரது குடும்பத்துக்கு முக்கியப் பங்குண்டு என்றாா்.
2029-க்குள் நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ள நிலையில், பிரதமா் இவ்வாறு தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் ஆளுநா் தரன்ஜீத் சிங் சாந்து, தில்லி முதல்வா் ரேகா குப்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.