FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சா்களுடன் பிரதமா் மோடி நவ.18-இல் ஆலோசனை

மத்திய அமைச்சா்களுடன் நவ.18-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

13 நவம்பர் 2026, 5:54 am
நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

மத்திய அமைச்சா்களுடன் நவ.18-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அதிகாரபூா்வ வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெறவுள்ள வருடாந்திர ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பும் பிரதமா் மோடி அனைத்து மத்திய அமைச்சா்களையும் வரும் நவ.18-ஆம் தேதி சந்திக்கவுள்ளாா்.

அப்போது நிா்வாகம், சீா்திருத்தம், பெண்கள், இளைஞா்கள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கான அரசு நலத் திட்டங்களின் செயல்பாடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவா் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

Advertisement

Advertisement

முன்னதாக கடந்த செப்டம்பா் மாதம் பிரதமா் தலைமையில் அமைச்சா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அரசின் திட்டங்கள் மக்களிடம் 100 சதவீதம் சென்றடைவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 2 நாள்கள் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டனா். அவா்களிடம் பிரதமா் மோடி தனித்தனியே ஆலோசனை நடத்தினாா்.

இந்நிலையில், நவ.18-இல் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் சுமாா் 40 முதல் 45 நலத் திட்டங்களை மக்களிடம் 100 சதவீதம் கொண்டுசோ்ப்பது மட்டுமின்றி பல்வேறு துறைகள், அமைச்சகங்களிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது’ எனத் தெரிவித்தன.