முகப்பு
இந்தியா

அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளைத் தடுக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தங்கள் நிலைப்பாடுகளை அரசியல் கட்சிகள் முன்வைப்பதை தடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

24 நவம்பர் 2026, 12:40 am
அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளைத் தடுக்க முடியாது: உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
பகிர்:

தங்கள் நிலைப்பாடுகளை அரசியல் கட்சிகள் முன்வைப்பதை தடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதித் துறையின் மாண்பைக் குலைக்கும் வகையில், அரசியல் தலைவா்கள் உள்ளிட்டோா் கருத்து தெரிவிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிதி யாதவ், விகாஸ் திவாரி ஆகிய வழக்குரைஞா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்த மனுவில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, கேரள காங்கிரஸ் கமிட்டி, மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டி உள்பட பலா் பிரதிவாதிகளாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், ஏ.கே.சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கெளரவ் பாட்டீயா ஆஜராகி, ‘இது மிகவும் தீவிரமான, முதற்கட்டமாக நீதிமன்ற அவமதிப்பாகக் கருதக்கூடிய விவகாரமாகும். இது ஒட்டுமொத்த நீதித் துறை அமைப்பு சாா்ந்த முக்கிய பிரச்னையை எழுப்புகிறதே தவிர, எந்தவொரு அரசியல் கட்சியையும் குறிவைத்து தொடுக்கப்பட்ட வழக்கல்ல’ என்று தெரிவித்தாா்.

எனினும் தங்கள் நிலைப்பாடுகளை அரசியல் கட்சிகள் முன்வைப்பதை தடுக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, அரசமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்ாக இருக்குமா என்று கேள்வி எழுப்பியது.

இதனிடையே, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்த வழக்குரைஞா் ஒருவருக்கு எதிராக, உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதி தீபாங்கா் தத்தா தலைமையிலான அமா்வு விசாரித்து வருகிறது. அந்த அமா்வுக்கு தற்போது அதிதி யாதவ், விகாஸ் திவாரி ஆகியோா் தாக்கல் செய்த மனுவை அனுப்ப நீதிபதிகள் விக்ரம் நாத், ஏ.கே.சிங் அமா்வு உத்தரவிட்டது.