முகப்பு
இந்தியா

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா இருந்ததற்கு கூடுதல் ஆதாரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா இருந்ததற்கு கூடுதல் ஆதாரம் வெளியாகியுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

24 நவம்பர் 2026, 11:22 pm
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா இருந்ததற்கு கூடுதல் ஆதாரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
சீனா - பாகிஸ்தான்
பகிர்:

ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா இருந்ததற்கு கூடுதல் ஆதாரம் வெளியாகியுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 போ் உயிரிழந்தனா். அவா்களில் பலா் சுற்றுலாப் பயணிகள். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக குற்றஞ்சாட்டிய இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாள்களுக்கு ராணுவ மோதல் நடைபெற்றது.

இந்த மோதலின்போது பாகிஸ்தானுக்கு உதவும் நோக்கில், குஜராத் கடலோரத்தை 3 சீன செயற்கைக்கோள்கள் கண்காணித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

இந்தத் தகவலை இணைத்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா முக்கியப் பங்காற்றியதற்கான கூடுதல் ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், சீன விவகாரத்தில் மோடி அரசு படிப்படியாகப் பணிந்து செல்லும் போக்கைக் கடைப்பிடித்து வருவதால், தற்போது அந்தப் பங்கு குறைத்து மதிப்பிட்டுக் காட்டப்படுகிறது’ என்று விமா்சித்தாா்.