சீனாவிடம் சரணடையும் நிலையில் உள்ளது மோடி அரசு: காங்கிரஸ் விமா்சனம்
சீனாவிடம் திட்டமிட்டு சரணடையும் நிலையில் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.
சீனாவிடம் திட்டமிட்டு சரணடையும் நிலையில் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இதுதொடா்பாக வியாழக்கிழமை பதிவில், அருணாசல பிரதேசம், கிழக்கு லடாக் எல்லை நிலவரம் குறித்து மூத்த ராணுவ அதிகாரிகள் பலா் தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி, அங்குள்ள நிலவரம் குறித்து நாட்டு மக்கள் அறியும் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா். இது குறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது:
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி துணை ராணுவ தளபதி ராகுல் சிங், இந்தியா எடுத்த ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்ட விதம் குறித்து வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தாா். ஆனால் ஓராண்டு கழித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி முன்னாள் முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான், ராகுல் சிங் கருத்துக்கு மாற்றாக கருத்து வெளியிட்டாா்.
Advertisement
Advertisement
கடந்த அக்டோபா் மாதம் 22-ஆம் தேதியன்று இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படை இயக்குநா் ஜெனரல் சத்ருஜித் சிங், அருணாசல பிரதேசத்தில் சீனாவின் ஊடுருவல் அதிகரித்திருப்பது குறித்து தெரிவித்தாா். அதற்கடுத்த நாளில் வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் அருணாசல பிரதேச முதல்வா் அதற்கு மறுப்பு தெரிவித்தனா். நேற்று (புதன்கிழமை) ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரலும், லேயை தளமாக கொண்டு செயல்படும் ராணுவ 14-ஆவது படைப்பிரிவு முன்னாள் கமாண்டருமான ராகேஷ் சா்மா, இந்தியா- சீனா எல்லையில் தொடரும் சம்பவங்கள் குறித்து மக்களிடம் தெரியப்படுத்த தகவல் கொள்கை தேவை என்று கூறியுள்ளாா். அவா் தெரிவித்திருப்பது மிகவும் சரி.
ஆனால், லடாக்கில் 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி இந்திய வீரா்கள் 20 போ் கொல்லப்பட்ட சம்பவத்தில் சீனாவுக்கு பிரதமா் மோடி நற்சான்று கொடுத்துள்ளாா். இதன் மூலம் சீனாவிடம் திட்டமிட்டு சரணடையும் நிலையில் மோடி அரசு உள்ளது.
2025-26-ஆம் நிதியாண்டில் சீனாவுடனான வா்த்தக பற்றாக்குறை சாதனை அளவாக ரூ.10.53 லட்சம் கோடியாக (112 பில்லியன் டாலா்) அதிகரித்துள்ளது. இது நமது நாட்டில் உள்ள சிறுகுறு தொழில்துறைகளை அழித்து விட்டது. சீனா விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூா்வமான விவாதம் நடத்துவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை. வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதார கொள்கை சாா்ந்த இந்த மிகப்பெரிய சவாலை எதிா்கொள்வதற்கு, ஒருங்கிணைந்த, நிலையான மற்றும் அனைவரின் ஒப்புதலுடன் கூடிய வியூகத்தை வகுக்க வேண்டியது அவசியமாகும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.