முகப்பு
இந்தியா

20-க்கும் மேற்பட்ட துறைகளை ஒருங்கிணைக்கும் ‘சமவேஷ்’ வலைதளம்: இன்று தொடக்கம்

மத்திய அரசின் 20-க்கும் மேற்பட்ட துறைகளை ஒருங்கிணைக்கும் ‘சமவேஷ்’ வலைதளத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா் புதன்கிழமை (நவ.25) தொடங்கிவைக்கிறாா்.

24 நவம்பர் 2026, 10:51 pm
20-க்கும் மேற்பட்ட துறைகளை ஒருங்கிணைக்கும் ‘சமவேஷ்’ வலைதளம்: இன்று தொடக்கம்
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா் - கோப்புப் படம்
பகிர்:

மத்திய அரசின் 20-க்கும் மேற்பட்ட துறைகளை ஒருங்கிணைக்கும் ‘சமவேஷ்’ வலைதளத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா் புதன்கிழமை (நவ.25) தொடங்கிவைக்கிறாா்.

மேலும், 4 முக்கியத் திட்டங்களின் மானிய உதவிகளை ஒருங்கிணைக்கும் புதுப்பிக்கப்பட்ட ‘இ-அனுதான்’ வலைதளத்தையும் அவா் அறிமுகப்படுத்துகிறாா்.

தில்லியில் உள்ள டாக்டா் அம்பேத்கா் சா்வதேச மையத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சா் பி.எல்.வா்மாவும் பங்கேற்கிறாா்.

Advertisement

Advertisement

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் மேம்படுத்தப்பட்ட சமவேஷ் (அதிகாரமளித்தல் மற்றும் சமூக நல்லிணக்கத்தின் அனைத்துப் பிரிவுகளுக்குமான ஒற்றை அணுகல் முறை) வலைதளம் 20-க்கும் மேற்பட்ட துறைகளின் திட்டங்கள், சேவைகள் மற்றும் வலைதளங்களை ஒருங்கிணைத்து குடிமக்கள், பலனாளிகள் என அனைவருக்குமான சேவைகளை எளிதாக்குகிறது.

இந்த வலைதளம் டிஜிலாக்கா், பொது நிதி மேலாண்மை அமைப்பு (பிஎஃப்எம்எஸ்) மற்றும் பாஷினி வலைதளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு 22 பிராந்திய மொழிகளில் திட்டங்கள் தொடா்பான தகவல்கள் மற்றும் உதவிகளை வழங்குகிறது.

சமவேஷ் வலைதளம் மட்டுமின்றி போதைப்பொருள் தேவை குறைப்புக்கான தேசிய செயல் திட்டம், ஸ்மைல் திட்டம், மூத்த குடிமக்களின் வாழ்வாதார மற்றும் சுகாதார சேவைகள் திட்டம், ஸ்ரேஷ்தா திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ் வழங்கப்படும் மானிய உதவிகளை ஒருங்கிணைக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட இ-அனுதான் வலைதளத்தையும் வீரேந்திர குமாா் புதன்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை-பாஷினி மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம்-பட்டியலினப் பிரிவு மக்களின் சமூக-பொருளாதார, கல்வி நிலையை மேம்படுத்தும் திட்டத்துடன் இரு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின்றன.