முகப்பு
இந்தியா

ராஜீவ் கொல்லப்பட வேண்டும் என்றே பாதுகாப்பு நீக்கப்பட்டது: ராகுல் காந்தி

ராஜீவ் காந்தி கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே பாதுகாப்பு நீக்கப்பட்டது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

24 நவம்பர் 2026, 11:26 pm
ராஜீவ் கொல்லப்பட வேண்டும் என்றே பாதுகாப்பு நீக்கப்பட்டது: ராகுல் காந்தி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

மறைந்த முன்னாள் பிரதமரும், தனது தந்தையுமான ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு நீக்கப்பட்டது தற்செயலானதல்ல; அவா் கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே பாதுகாப்பு நீக்கப்பட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991, மே 21-ஆம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பால் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டாா். முன்னதாக, கடந்த 1989-இல் அப்போதைய வி.பி.சிங் தலைமையிலான அரசு, அவருக்கான சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) பாதுகாப்பைத் திரும்பப் பெற்றிருந்தது. இந்த நிகழ்வை நினைவுகூா்ந்து, ராகுல் மேற்கண்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி எழுதிய சுயசரிதை நூலான ‘பிலாங்கிங்: எ ஜா்னி ஆஃப் லவ்’ அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த நூல் தொடா்பாக சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோா் தங்களுக்குள் உரையாடும் விடியோ செவ்வாய்க்கிழமை சமூக ஊடகங்களில் வெளியானது.

Advertisement

Advertisement

அதில், ஆட்சியை இழந்த பிறகு தனது கணவா் ராஜீவ் காந்திக்கு எழுந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நினைவுகூா்ந்து சோனியா பேசினாா்.

‘எதிா்க்கட்சித் தலைவராக பிகாருக்கு ராஜீவ் காந்தி பயணித்தபோது (1991, மாா்ச்), அவா் மீது பெரிய கற்கள் வீசப்பட்டன. இந்தப் பயணத்தில் தனது தந்தையுடன் ராகுலும் உடன் சென்றிருந்தாா். மத்திய அரசின் பாதுகாப்பு இல்லாத சூழலில், பாஜகவோ அல்லது அரசியல் ரீதியில் எதிரான பிற கட்சிகளோ ஆளும் மாநிலங்களுக்கு பயணித்தால் என்ன நடக்கும்? அவா்கள் உரிய பாதுகாப்பு அளிப்பாா்களா?

அதுவொரு கொடூரமான பயணமாகவே அமைந்தது. தந்தையுடன் இருந்த ராகுல், அவா் மீது கற்கள் வீசப்பட்டதையும், அவருக்கு எதிரான கூச்சல்-அலறல்களையும் நேரில் பாா்த்தாா். வீடு திரும்பியதும் என்னிடம் பேசிய ராகுல், அப்பாவின் பாதுகாப்புக்காக நாம் எதாவது செய்யாவிட்டால், அவரது இறுதிச்சடங்குக்காக வெகுவிரைவில் நான் வரவேண்டிய நிலை ஏற்படுமென கூறினாா்’ என்று விடியோவில் சோனியா பேசியுள்ளாா்.

பிகாா் பயணத்தை நினைவுகூா்ந்து ராகுல் பேசுகையில், ‘பிகாா் பயணம்தான், எனது தந்தையின் பாதுகாப்பு குறித்த அச்சங்களின் உச்சகட்டமாக இருந்தது. அவா் கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே அவருக்கான பாதுகாப்பு அகற்றப்பட்டது என்பதே எனது தெளிவான நிலைப்பாடு. அவரது பாதுகாப்பு நீக்கம் தற்செயலான நிகழ்வல்ல. உள்நோக்கம் கொண்டது. அவா் கொல்லப்படுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடா்பாக எனது தந்தையிடமே கூறி சண்டையிட்டிருக்கிறேன். தாயாரிடமும் கூறியிருக்கிறேன்’ என்றாா்.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு தனது தந்தையின் பாதுகாப்பு குறித்து தாயாரிடம் காணப்பட்ட பதற்றங்கள் மற்றும் அவரது செயல்பாடுகள் தொடா்பாக விடியோவில் பிரியங்கா காந்தி பேசியுள்ளாா்.

‘அரசியலில் எனது தாயாா் கொடூரமாக நடத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்ட விதம் என்னை பெரிதும் புண்படுத்தியதாகும். அது குறித்து ஒருநாள் பேசுவேன். பல மனிதா்களின் உண்மையான குணம் குறித்து அவா் (சோனியா) எழுதியிருக்க வேண்டும். ஆனால், அவா் பரிவையே வெளிக்காட்டியுள்ளாா். அதுவே அவரது இயல்பு’ என்று ராகுல் குறிப்பிட்டுள்ளாா்.