முகப்பு

கேரள தேவாலயத்தில் பாடப்பட்ட பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடலால் பரபரப்பு!

கேரள தேவாலயத்தில் பாடப்பட்ட பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடலால் பரபரப்பு ஏற்பட்டது.

27 வினாடிகள் முன்பு
கேரள தேவாலயத்தில் பாடப்பட்ட பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடலால் பரபரப்பு!
தேவாலயம் - பிரதிபடம்
பகிர்:

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் பாலா பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், கலைஞர்கள் திடிரென பள்ளிக்கட்டு சபரிமலைக்கு என்று பாடத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேவாலயம் சார்பில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இசைக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு கச்சேரி நடத்தப்பட்டது.

ஆரம்பத்தில் கிறிஸ்தவ பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தவர்கள் திடீரென பள்ளிக்கட்டு சபரிமலைக்கு என்ற பாடத் தொடங்கினார்.

Advertisement

Advertisement

இதனைக் கேட்ட அங்கிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் மேடை மீது ஏறி, சபரிமலை ஐயப்பன் பாடலைப் பாடிக் கொண்டிருந்த கலைஞரை நிறுத்துமாறு கூறிச் சென்றார்.

பிறகு மீண்டும் கிறிஸ்தவ பாடல்கள் பாடப்பட்டுக் கொண்டேயிருந்த போது, இடையிடையே ஐயப்பன் பாடல்களும் இசைக்கப்பட்டதால் கூட்டத்தில் இருந்தவர்கள் கூச்சல் எழுப்பினர். பிறகு, ஐயப்பன் பாடலைப் பாடிய இசைக் கலைஞர், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். இது குறித்து தேவாலய நிர்வாகம் சார்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

summary

A song sung at a Kerala church—a song meant for the Sabarimala pilgrimage—has caused a stir!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.