முகப்பு

சிஜேபி நிர்வாகிக்கு மும்பை போலீஸ் லுக்-அவுட் நோட்டீஸ்! - நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

சிஜேபி இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸுக்கு மும்பை போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்ததாக மத்திய அரசு தகவல்...

சிஜேபி நிர்வாகிக்கு மும்பை போலீஸ் லுக்-அவுட் நோட்டீஸ்! - நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
சிஜேபி இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் - கோப்புப் படம் | ANI
பகிர்:

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸுக்கு மும்பை காவல் துறை லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்ததாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சிஜேபி இயக்கம் குறித்து உரையாற்ற புறப்பட்ட சௌரவ் தாஸ், கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 23) இரவு தில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவரது கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் பிறப்பிடம் குறித்த தகவல்களில் முரண்பாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் சௌரவ் தாஸ் மனு தாக்கல் செய்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இன்று (நவ. 26) நீதிபதி அமித் மஹாஜன் முன்னிலையில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், சௌரவ் தாஸுக்கு எதிராக மும்பை காவல் துறை லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்ததாகவும், அதற்கு அவர் உரிய பதிலளிக்கவில்லை என்றும் மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், லுக்-அவுட் நோட்டீஸ் குறித்தும், அது பிறப்பிக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் நோக்கம் குறித்தும் எந்தவொரு தகவலும் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என சௌரவ் தாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை வரும் டிச. 9 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான சிஜேபியின் போராட்டங்களின்போது, சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையிலடைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

The central government has stated that the Mumbai Police had issued a 'look-out notice' against Sourav Das, a co-coordinator of the CJP.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.