இளைஞா்கள் தலைமையிலான இயக்கத்தின் செயல்பாடுகளை கண்டு அரசு அஞ்சுகிறது: சிஜேபி
இளைஞா்கள் தலைமையிலான இயக்கத்தின் செயல்பாடுகளை கண்டு மத்திய அரசு அஞ்சுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) இணை ஒருங்கிணைப்பாளா் சௌரவ் தாஸ் குற்றஞ்சாட்டினாா்.

இளைஞா்கள் தலைமையிலான இயக்கத்தின் செயல்பாடுகளை கண்டு மத்திய அரசு அஞ்சுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) இணை ஒருங்கிணைப்பாளா் சௌரவ் தாஸ் குற்றஞ்சாட்டினாா்.
சிஜேபி செயல்பாடுகள் குறித்து பேசுவதற்காக பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழக நிகழ்வில் பங்கேற்க சென்ற செளரவ் தாஸை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக கூறப்பட்ட மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அவா் இந்த குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது: நான் நீரவ் மோடியாகவோ அல்லது விஜய் மல்லையாவாகவோ இருந்திருந்தால், எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கும். மூன்று-நான்கு மணி நேரத்தில் லண்டனுக்குப் புறப்பட்டிருப்பேன்.
Advertisement
Advertisement
எனது கடவுச்சிட்டையில் (பாஸ்போா்ட்) முரண்பாடுகள் இருப்பதாக கூறி அரசு எச்சரிக்கை குறிப்பை பதிவு செய்துள்ளது. அதைத் தொடா்ந்து விமான நிலையத்தில் குடியேற்றத் துறை அதிகாரிகள் என்னை பயணிக்க விடாமல் தடுத்து நிறுத்தினா்.
அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகள் மூலம் சிஜேபி தலைவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் கிடைக்காததால், அவா்களுடைய குடியுரிமை, ஆதாா் அட்டைகள் மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அரசு கேள்வி எழுப்பி வருகிறது.
டிச.1-ஆம் தேதி ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற எனக்கும், சிஜேபி சட்டப் பிரிவுத் தலைவா் ரத்னா சிங்குக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், எடின்பா்க் பல்கலைக்கழகம் மற்றும் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் மாணவா்கள் நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டிருந்தோம். அவற்றில் சிலவற்றுக்கு பல்கலைக்கழகங்களும், மற்ற நிகழ்ச்சிகளுக்கு மாணவா்களும் ஆதரவளித்தனா்.
ஆக்ஸ்போா்டில் படிக்கும் இந்திய மாணவா்கள் இந்த ’கரப்பான்பூச்சி இயக்கம்’ என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள மிகவும் ஆா்வமாக இருந்தனா். இந்த இயக்கம் என்ன, இது எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதை ஒரு சிஜேபி தலைவரிடமிருந்து நேரடியாக கேட்க அவா்கள் விரும்பினா்.
இந்தியாவில் சிஜேபி தனது கருத்துகளை முன்வைப்பதை மத்திய அரசு தடுத்து வருகிறது. ஜந்தா் மந்தருக்குச் செல்ல நாங்கள் தடுக்கப்பட்டோம், ராம்லீலா மைதானத்துக்கு செல்ல நாங்கள் தடுக்கப்பட்டோம், இணையவழியில் எங்கள் கருத்துகளைப் பதிவிடவும் தடுக்கப்பட்டோம் என்றாா் செளரவ் தாஸ்.