FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிஜேபி தலைவர்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வாபஸ்!

சிஜேபி தலைவர்களின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றது குறித்து...

அசுதோஷ், சௌரவ் - படம் - பிடிஐ
பகிர்:

நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் சிஜேபி தலைவர்கள் அசுதோஷ், சௌரவ் தாக்கல் செய்த மனுவை புதன்கிழமை (அக். 21) வாபஸ் பெற்றனர்.

ஜந்தர் மந்தருக்குள் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர்கள் அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகியோரை அக். 13 ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், அக். 19 ஆம் தேதி அது நிறைவடைந்தது. இதையடுத்து அவர்களின் நீதிமன்றக் காவல் மேலும், 2 நாள்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அக். 19 ஆம் தேதி சிறப்பு நிர்வாக மஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement

Advertisement

இதையடுத்து, நீதிமன்றக் காவலுக்கு எதிராக அசுதோஷ், சௌரவ் ஆகியோர் தில்லி உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (அக். 20) அவசர மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் இன்று விசாரித்தபோது, அரசியலமைப்பின் 226-வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு இந்தப் பிரிவுக்கு பொருத்தமானதல்ல என்று கூறி, அந்த மனுவில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்த சிறப்பு நிர்வாக மஜிஸ்திரேட் முன்பு நடைபெறவுள்ள விசாரணையின் தீர்ப்புக்காகக் காத்திருக்குமாறும் அதில் திருப்தி இல்லையெனில் உரிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அணுகுமாறும் நீதிபதி அறிவுறுத்தினார்.

ஆகையால், சிஜேபி தலைவர்களின் வழக்கறிஞர் இந்த மனுவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

summary

CJP leaders Ashutosh and Sourav on Wednesday (Oct. 21) withdrew the petition filed in the Delhi High Court against the order extending their judicial custody.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments