முகப்பு

லண்டன் செல்ல தடை! தில்லி உயர் நீதிமன்றத்தில் சௌரவ் தாஸ் அவசர மனு!

லண்டன் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து சௌரவ் தாஸ் உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் பற்றி..

27 வினாடிகள் முன்பு
லண்டன் செல்ல தடை! தில்லி உயர் நீதிமன்றத்தில் சௌரவ் தாஸ் அவசர மனு!
தில்லி உயர் நீதிமன்றம் - பிரதிப் படம்
பகிர்:

லண்டன் செல்வதைத் தடுத்து நிறுத்தப்பட்டதாக கரப்பான் பூச்சி அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்தியா முழுவதும் இளைஞர்கள் முன்னெடுத்த இயக்கம் குறித்து ஆக்ஸ்போர்டு, எடின்பரோவில் உள்ள பல்கலையில் பேச சௌரவ் தாஸுக்கு அழைப்பு வந்ததையடுத்து, ஆனால், அவர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

நவம்பர் 27-ஆம் தேதிக்குள் நான் லண்டன் சென்றடைந்தால், அங்கு திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் என்னால் பங்கேற்க முடியும். இதையடுத்து சௌரவ் தாஸ் தில்லி உயர் நீதிமன்றத்தில், இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு புதன்கிழமை கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

இதனை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சாம்பரே, நீதிபதி சஞ்சய் சர்மா அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் (நவ. 25) வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

லண்டன் செல்வதற்காக அதிகாலை 1 மணிக்கு விமானத்தில் ஏற முயன்றபோது, ​​என்னுடைய கடவுச்சீட்டு முடக்கப்பட்டதாக, தன்னை தில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தினர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக லண்டன் செல்ல முயன்ற தன்னை, மோடி அரசு தில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டேன்.

ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், எல்.எஸ்.இ மற்றும் எடின்பர்க் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் 'கரப்பான் பூச்சி' குறித்து உரையாற்ற எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த கோழை அரசு என்னை லண்டன் செல்ல அனுமதிக்கவில்லை.

கல்வி கற்ற இளைஞர் ஒருவர், கல்வி கற்ற மக்களிடையே சென்று அறிவுப்பூர்வமான கலந்துரையாடலில் ஈடுபடுவதைக் கண்டு மத்திய அரசு ஏன் இவ்வளவு அஞ்சுகிறது? நான் நீரவ் மோடியாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

விஜய் மல்லையாவாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. நான் வங்கிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடிகளைச் சுருட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.