முகப்பு

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 3 பேர் கைது!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...

27 நவம்பர் 2026, 9:54 pm
ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 3 பேர் கைது!
ஜம்மு-காஷ்மீர்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 3 பேரைப் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள நர்வாவ் மற்றும் ராவல்போரா பகுதிகளில் தேசவிரோத சக்திகள் நடமாடுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ராணுவம் மற்றும் சிறப்பு நடவடிக்கைக் குழு வீரர்கள் இணைந்து அப்பகுதியைச் சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த நடவடிக்கையின் போது சந்தேகத்திற்குரிய 3 நபர்களைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

Advertisement

Advertisement

அவர்களிடமிருந்து 2 கையெறி குண்டுகள், 3 செல்போன்கள், 20 ஏகே ரக துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் 5 சுவரொட்டிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

summary

Security forces arrested three people in Jammu and Kashmir on Friday for allegedly aiding terrorists.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.