FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜம்மு-காஷ்மீரில் மசூதி மீது கல்வீச்சு: 4 பேர் கைது

ஜம்மு-காஷ்மீரில் மசூதி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து....

2 நவம்பர் 2026, 1:14 pm
ஜம்மு-காஷ்மீர். - கோப்புப்படம்.
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் மசூதி மீது கல்வீசியதாக 4 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீரின் ஷெர்பாக் பகுதியில் உள்ள பெஹ்ரூ என்ற இடத்தில் அமைந்த மசூதியில் சிலர் ஞாயிற்றுக்கிழமை மாலை தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சமூக விரோதிகள் சிலர் மசூதி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக 4 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம் என்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்து திங்கள்கிழமை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்ட ஒரு வீட்டில் தொழுகை நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. மாலை தொழுகையின் போது சில சமூக விரோதிகள் கல்வீசியதில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது.

காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்" என்று தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

summary

Police have detained four persons for allegedly vandalising a mosque in Jammu and Kashmir's Anantnag district, with officials cautioning against giving a "communal colour to the incident" and advising people not to share unverified information.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments