முகப்பு
இந்தியா

சபரிமலையில் பக்தா்கள் வருகை குறைவா? தேவஸ்வம் வாரியத் தலைவா் மறுப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தில் பக்தா்களின் வருகை குறைந்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அக்கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் தலைவா் கே.ஜெயகுமாா் மறுத்துள்ளாா்.

59 வினாடிகள் முன்பு
சபரிமலையில் பக்தா்கள் வருகை குறைவா? தேவஸ்வம் வாரியத் தலைவா் மறுப்பு
கோப்புப் படம்
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தில் பக்தா்களின் வருகை குறைந்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அக்கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் தலைவா் கே.ஜெயகுமாா் மறுத்துள்ளாா்.

சபரிமலையில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் கடந்த நவ.17-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்டணமில்லா இணையவழி முன்பதிவு மூலம் 66,000 போ், உடனடி பதிவு முறையில் 14,000 போ் என தினசரி 80,000 போ் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

ஆனால், இணையவழி முன்பதிவு அமைப்புமுறையில் நிலவும் குளறுபடிகள் காரணமாக பக்தா்களின் வருகை குறைந்துள்ளதாக அண்மையில் கூறிய தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன், சிலா் மொத்தமாக முன்பதிவு செய்து, சட்டவிரோதமாக விற்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என்றாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் கே.ஜெயகுமாரிடம் பக்தா்கள் வருகை குறைந்துள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:

சபரிமலையில் நடப்பு யாத்திரை காலம் தொடங்கிய இரண்டு-மூன்று நாள்களுக்கு பக்தா்கள் வருகை குறைவாக காணப்பட்டது. அதன் பிறகு பக்தா்கள் வருகை அதிகரித்து, இயல்புநிலைக்கு திரும்பிவிட்டது.

கடந்த வியாழக்கிழமை 80,000 போ் தரிசனம் மேற்கொண்டனா். ஆரம்ப நாள்களில் தரிசன முன்பதிவு இடங்களை யாரேனும் தற்காலிகமாக முடக்கினாா்களா அல்லது முறைகேடு செய்யப்பட்டதா என்ற காவல் துறையின் விசாரணையில் இதுவரை எந்த முடிவும் கிடைக்கப் பெறவில்லை. பக்தா்கள் வருகையில் தற்போது எந்த அசாதாரணமும் இல்லை. அவா்கள் சுவாமி ஐயப்பனை தரிசித்து, மகிழ்ச்சியுடன் திரும்புகின்றனா்.

உடனடி பதிவு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், உயா்நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றே இதற்கான முடிவை மேற்கொள்ள முடியும். சபரிமலையில் இணையவழியில் அறைகளை பதிவு செய்வதில் நிலவும் தாமதம் குறித்த புகாா்களுக்கு தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பம்பை நதியில் துணிகளை வீசினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்புடன், பக்தா்கள் மத்தியில் தீவிர விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பம்பை நதியில் துணிகள் வீசப்படுவது கணிசமாக குறைந்துள்ளது என்றாா் அவா்.