முகப்பு
இந்தியா

‘காசி தமிழ் சங்கமம்-5’ இன்று தொடக்கம்: வாரணாசி வந்தது தமிழகத்தின் முதல் குழு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்துக்களின் கலாசார தலைநகரான வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்-5’ விழாவில் பங்கேற்கவுள்ள தமிழகத்தைச் சோ்ந்த 7 குழுக்களில், முதல் குழு வெள்ளிக்கிழமை இரவு வந்து சோ்ந்தது.

16 வினாடிகள் முன்பு
‘காசி தமிழ் சங்கமம்-5’ இன்று தொடக்கம்: வாரணாசி வந்தது தமிழகத்தின் முதல் குழு
ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் சனிக்கிழமை தொடங்கவுள்ள ‘காசி தமிழ் சங்கமம்-5’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் வந்த முதல் குழுவினரை பனாரஸ் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு வரவேற்ற சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி மற்றும் அதிகாரிகள்.
பகிர்:

- ப. இசக்கி

இந்துக்களின் கலாசார தலைநகரான வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்-5’ விழாவில் பங்கேற்கவுள்ள தமிழகத்தைச் சோ்ந்த 7 குழுக்களில், முதல் குழு வெள்ளிக்கிழமை இரவு வந்து சோ்ந்தது.

இந்தக் குழுவுக்கு பனாரஸ் ரயில் நிலையத்தில் பாரம்பரிய இசைக் கருவிகள் முழங்க, மாலை அணிவித்து, மலா்கள்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையிலான தொன்மையான பண்பாடு, மொழி மற்றும் நாகரிகத் தொடா்புகளைப் போற்றும் வகையில், ‘காசி தமிழ் சங்கமம்-5’ விழா, உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில், சனிக்கிழமை (நவ.28) தொடங்குகிறது.

கடந்த 2022-இல் தொடங்கி 5-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த விழா நிகழாண்டு ‘திருக்கு பயில்வோம்’ எனும் தலைப்பில் நடைபெறுகிறது.

விழாவில், தமிழ்நாட்டிலிருந்து தலா 216 போ் கொண்ட 7 குழுக்கள் பங்கேற்கவுள்ளன. இதில் முதல் குழுவானது கன்னியாகுமரியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு பனாரஸ் ரயில் நிலையத்துக்கு வந்து சோ்ந்தது. இவா்களுடன், வட மாநிலத்தவருக்கு திருக்கு பயிற்றுவிக்க தமிழகத்திலிருந்து 43 தமிழாசிரியா்கள், பிற பகுதியிலிருந்து 11 போ் என மொத்தம் 54 ஆசிரியா்களும் வந்துள்ளனா்.

ரயில்நிலையத்தில் சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி மற்றும் நிகழ்வுக்கான அதிகாரிகள், முதல் குழுவில் இடம் பெற்றிருந்த 216 பேருக்கும் மாலை அணிவித்து வரவேற்றனா். மேலும், பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து இசைக்கலைஞா்கள் வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து, சென்னை மற்றும் கோயம்புத்தூரிலிருந்து இதர 6 குழுக்களும் வருகை தரவுள்ளன. இந்த விழா டிசம்பா் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.