முகப்பு

தில்லியில் வீட்டில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி

தலைநகர் தில்லியில் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து...

29 நவம்பர் 2026, 5:05 pm
தில்லியில் வீட்டில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி
கோப்புப்படம்.
பகிர்:

தலைநகர் தில்லியில் வீட்டில் ஏற்பட்ட பயங்கரத் தீவிபத்தில் 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு தில்லியின் விஸ்வாஸ் நகரில், நான்கு அடுக்குமாடிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் இருந்த மின்-ரிக்‌ஷா சார்ஜிங் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் இருவர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.13 மணியளவில் தில்லி தீயணைப்புத் துறைக்கு இது குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. கட்டடத்தின் மேல் தளத்தில் சிக்கியிருந்த ஆறு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Advertisement

Advertisement

அவர்களில் நான்கு பேர் பலியாகினர். மற்ற இருவர் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இருவரும் தற்போது நலமாக இருப்பதாகக் குறிப்பிட்ட காவல் அதிகாரி, மின்-ரிக்‌ஷா சார்ஜிங் மையமே தீ விபத்துக்கான தொடக்கப் புள்ளியாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

summary

Four people were killed, and two others suffered burn injuries after a fire broke out at a house in Delhi's Vishwas Nagar area in the early hours of Sunday. Preliminary reports revealed that the fire erupted out in the parking area of a house in Gali No. 11, near Unity Mall in Shahdara district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.