தில்லியில் வீட்டில் பயங்கிர தீ விபத்து: 4 பேர் பலி
தலைநகர் தில்லியில் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து...

தலைநகர் தில்லியில் வீட்டில் ஏற்பட்ட பயங்கரத் தீவிபத்தில் 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு தில்லியின் விஸ்வாஸ் நகரில், நான்கு அடுக்குமாடிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் இருந்த மின்-ரிக்ஷா சார்ஜிங் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் இருவர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.13 மணியளவில் தில்லி தீயணைப்புத் துறைக்கு இது குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. கட்டடத்தின் மேல் தளத்தில் சிக்கியிருந்த ஆறு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
Advertisement
Advertisement
அவர்களில் நான்கு பேர் பலியாகினர். மற்ற இருவர் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இருவரும் தற்போது நலமாக இருப்பதாகக் குறிப்பிட்ட காவல் அதிகாரி, மின்-ரிக்ஷா சார்ஜிங் மையமே தீ விபத்துக்கான தொடக்கப் புள்ளியாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.