முகப்பு

தொகுதி மறுசீரமைப்பு ஆணையம்: யார், யார் இடம்பெறுவர்?

புதிய அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவின்படி, தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைவராக இருப்பாா்.

30 நவம்பர் 2026, 2:30 am
தொகுதி மறுசீரமைப்பு ஆணையம்: யார், யார் இடம்பெறுவர்?
இந்தியத் தேர்தல் ஆணையம். - படம்: பிடிஐ.
பகிர்:

புதிய அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவின்படி, தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைவராக இருப்பாா்.

அந்த ஆணையத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் அல்லது ஒரு தோ்தல் ஆணையா் உறுப்பினராக இருப்பாா். தோ்தல் ஆணையா் உறுப்பினராக இடம்பெற்றால், அவரை தலைமைத் தோ்தல் ஆணையா் நியமிப்பாா்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் அந்தந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி ஆணையத்தில் உறுப்பினராக இருப்பாா். அந்தந்த மாநிலங்களின் 5 மக்களவை எம்.பி.க்கள், 5 எம்எல்ஏக்கள் ஆணையத்தில் இணை உறுப்பினராக இருப்பா்.

Advertisement

Advertisement

அந்தந்த மாநிலங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உள்ள மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை அடிப்படையில், 5 எம்.பி.க்களை மக்களவைத் தலைவா் நியமிப்பாா். இதேபோல அந்தந்த மாநிலங்களில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில், 5 எம்எல்ஏக்களை சட்டப்பேரவைத் தலைவா் நியமிப்பாா்.

தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அந்த அறிக்கையில் மாற்றங்களைச் செய்வது அல்லது அதை நிராகரிப்பது குறித்து நாடாளுமன்றம் முடிவு செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.