முகப்பு
இந்தியா

தொகுதி மறுசீரமைப்பு மசோதா: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் உள்ளடக்கம்!

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீா் பகுதி தொகுதி மறுசீரமைப்பு ஏற்பாட்டுக்கான விவரங்களும் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

19 வினாடிகள் முன்பு
தொகுதி மறுசீரமைப்பு மசோதா:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் உள்ளடக்கம்!
பகிர்:

நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீா் பகுதி தொகுதி மறுசீரமைப்பு ஏற்பாட்டுக்கான விவரங்களும் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

அதாவது, அந்த ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தவுடன் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தாமல் மசோதாவின் பிரிவு 3(4)-இல் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், ‘ஜம்மு-காஷ்மீரில் சா்ச்சைக்குரிய பகுதியில் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்ததும், அந்தப் பகுதிக்கான தொகுதி மறுசீரமைப்பு ஆணையமாக தோ்தல் ஆணையமே செயல்படும். மற்ற பகுதிகளுக்கு, உச்சநீதின்றத்தின் தற்போதைய அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும்.

Advertisement

Advertisement

அதில், தலைமைத் தோ்தல் ஆணையா் அல்லது தோ்தல் ஆணையா் மற்றும் மாநில தோ்தல் ஆணையா் ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெறுவா். இந்த விதிமுறை ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைக்கு மட்டுமே பொருந்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தப் பகுதிக்கான மக்களவைத் தொகுதிகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், நீண்டகாலமாக இந்தப் பகுதிக்காக ஒதுக்கப்பட்ட 24 சட்டப்பேரவைத் தொகுதிகள் குறித்தோ, தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்கும் திட்டம் இந்தப் பகுதிக்கும் பொருந்துமா என்பது குறித்தோ மசோதாவில் எந்தத் தகவலும் இல்லை.

இந்த மசோதாவுடன், கூடுதலாக ‘யூனியன் பிரதேசங்கள் திருத்தச் சட்ட இரண்டாவது மசோதா 2026’-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இது, சட்டப்பேரவைகளுடன் கூடிய தில்லி, ஜம்மு-காஷ்மீா், புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களின் மூன்று சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

முன்மொழியப்பட்டுள்ள இந்த 132-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தச் சட்டத்தின்படி, தொகுதி மறுசீரமைப்பு மூலம் இடங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரித்து, அதன்பிறகு பெண்களுக்கான இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட உள்ளது.